Kidny

Kidny

அமைச்சில் அனுமதி பெறாமல் 30 சொகுசு வாகனங்கள் இறக்குமதி.


அனுமதியின்றி சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சு விஷேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் சம்பந்தமாக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போதிருக்கின்ற சட்ட விதிகளுக்கு மாறாக 30 சொகுசு கார்களை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி அமைச்சர்  அல்லது பிரதியமைச்சரின் ஆலோசனைப்படியே வழங்க முடியும் என்ற போதிலும், இது தொடர்பில் உரிய அமைச்சர்களிடம் ஆலோசனைப் பெறப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

ஆகவே குறித்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக சுயாதீன குழுவொன்றை நியமிப்பதற்கு அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்தக் குழு ஓய்வு பெற்ற கணக்காய்வு திணைக்களத்தின் அதிகாரியின் தலைமையில் நியமிக்கப்பட உள்ளது.
அமைச்சில் அனுமதி பெறாமல் 30 சொகுசு வாகனங்கள் இறக்குமதி. அமைச்சில் அனுமதி பெறாமல்  30 சொகுசு வாகனங்கள் இறக்குமதி. Reviewed by Madawala News on 9/23/2017 01:12:00 PM Rating: 5