Kidny

Kidny

அக்குறணை 35 வருட பழமையான வர்த்தக கட்டிடத்தை உடைத்து 587 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக் திட்டம்.

 (மொஹொமட் ஆஸிக்)


அக்குறணை நகரில் அமைந்துள்ள சுமார் 35 வருடங்கள் பழமைவாய்ந்த   வர்ரத்தக கட்டிடத்தை உடைத்து விட்டு  புதித​ அனைத்து வசதிகளும் கொண்ட நான்கு மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றை நிர் மானிப்பது தொடர்பான கலந்துறுயாடல் ஒன்று  இன்று 14 ம் திகதி மாலை அக்குறணை  பிரதேச செயலக காரியாலயத்தில்  இடம் பெற்றது. 


 நீர் வழங்கள் மற்றும்  நகர அபிவிருத்தி அமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தலைவருமான றவுப் ஹக்கீம், தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சரும் ஹாரிஸ்பத்துவ ஐக்கிய தேசிய கட்சியின்  ​பிரதான அமைப்பாளருமான எம்.எச்.ஏ.ஹலீம்  ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  அக்குறணை  அமைப்பாளர் ஏ.எம்.எம்.சிம்சான்  ஆகியோர் ம.ற்றும் அதிகாரிகளின் தலமையில் இக் கலந்துறையாடல் இடம் பெற்றது.

 

இதற்கு சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் விவகார அமைச்சர்  ஏ.ஸீ.எஸ் ஹமீட் அவர்களது வேண்டுகோலுக்கு இனங்க  அன்றைய ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜயவர்தன அவர்களினால் இவ் வர்த்தக கட்டிடம் கட்டப்பட்டது.


காலம் கடந்து விட்ட இவ் வர்த்தக கட்டிடத்தை உடைத்து விட்டு நகருக்கு தேவைப்படும் வித்த்திளும் நவீன வசதியுடனும் இப் புதிய வர்த்தக நிலையம் நிர் மானிக்கப்பட உள்ள தாக இங்கு கலந்து கொண்ட  இரு அமைச்சருகளும் குறுப்பிட்டனர்.

 

இவ் வர்ரத்தக கட்டித்திற்கு 587 மில்லியன் ரூயாய் செலவுசெய்ய உள்ளதுடன் அதன் முதற் கட்ட மாக இவ்வருடம் 75 மில்லியன் ரூபாய்செலவு  செய்து  ​ஆரம்பவேலைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும்  அமைச்சர்கள் தெரிவித்தனர். 

2017 09 14 ஆஸிக்

அக்குறணை 35 வருட பழமையான வர்த்தக கட்டிடத்தை உடைத்து 587 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக் திட்டம். அக்குறணை 35 வருட பழமையான வர்த்தக கட்டிடத்தை உடைத்து 587 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக் திட்டம். Reviewed by Madawala News on 9/14/2017 04:54:00 PM Rating: 5