Kidny

Kidny

மியன்மாரில் இம்முறை இதுவரை 370 ரோஹிங்யா முஸ்லிம்கள் சுட்டுக்கொலை . இராணுவம் அறிவிப்பு.


மியான்மரில் உமுஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்  உச்சமடைந்துள்ள நிலையில் 370 ரோஹின்யா   முஸ்லிம்கள்   சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.

மியான்மரில் சிறுபான்மை இன மக்களான ரோஹிஞ்சா முஸ்லிம்களை மீண்டும்  இராணுவத்தினர் தாக்க தொடங்கிய நிகழ்வு   கடந்த 25ஆம் திகதி முதல் உச்சம் தொட்டுள்ளது.

இதன்  காரணமாக ரோஹிங்யா   முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புலம்பெயர்ந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் முதல்  370 ரோஹிங்யா  முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் எனவும்  அந்நாட்டு இராணுவம் அபாண்டமாக  அறிவித்துள்ளது.

மேலும், இந்த மோதலின் போது 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு இராணுவத்தளபதி Aung Hlaing தெரிவித்துள்ளது உச்சகட்ட அபாண்டம்.

இதேவேளை, மியானமரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் அடக்கு முறைகளுக்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் இம்முறை இதுவரை 370 ரோஹிங்யா முஸ்லிம்கள் சுட்டுக்கொலை . இராணுவம் அறிவிப்பு. மியன்மாரில் இம்முறை  இதுவரை 370 ரோஹிங்யா முஸ்லிம்கள் சுட்டுக்கொலை . இராணுவம் அறிவிப்பு. Reviewed by Madawala News on 9/03/2017 05:06:00 PM Rating: 5