Kidny

Kidny

மஹிந்தவை இணைத்துக்கொள்ள மைத்ரி பச்சைக்கொடி



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துகொள்வதற்கு கலந்துரையாடலொன்றை முன்னெடுக்க ஜனாதிபதி தலையைல் 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, அநுர யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரே, நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் நாட்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த செவ்வாய் இரவு இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் இந்த மூவர் குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பின்னர் அவருக்கு பிரதமர் பதவி வழங்க்பட்டும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு கடைசி நேரத்தில் அது நிறைவேற்றப்படாததால் மஹிந்த அணி மீண்டும் மைதிரியுடன் இணைய மாட்டார்கள் என் மஹிந்த அணி தரப்பு தெரிவித்துள்ளது.

மஹிந்தவை இணைத்துக்கொள்ள மைத்ரி பச்சைக்கொடி  மஹிந்தவை இணைத்துக்கொள்ள மைத்ரி பச்சைக்கொடி Reviewed by Madawala News on 9/09/2017 05:19:00 PM Rating: 5