Kidny

Kidny

5 மாடிகளை கொண்ட கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 5 பேர் காயம். ஒருவரை காணவில்லை.


அஹங்கம பிரதேசத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள ஒருவரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

புதிய கட்டிட நிர்மாணம் ஒன்று 5 மாடிகளை கொண்டுள்ள நிலையில், அத்திவாரம் பலமிழந்த காரணத்தால் இவ்வாறு சரிந்து வீழ்ந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
5 மாடிகளை கொண்ட கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 5 பேர் காயம். ஒருவரை காணவில்லை.  5 மாடிகளை கொண்ட கட்டிடம்  இடிந்து வீழ்ந்ததில் 5 பேர் காயம். ஒருவரை காணவில்லை. Reviewed by Madawala News on 9/18/2017 11:48:00 AM Rating: 5