Ad Space avaiable

வருடாந்தம் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பது அரசாங்கத்தின் இலக்கு


வருடாந்தம் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
              
ஸ்திரமான பொருளாதாரத்கை கட்டியெழுப்ப வேண்டுமானால் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனம்றும்  பிரதமர்  கூறினார். 
 
இலங்கை ஹோட்டல் பாடசாலை பட்டதாரிகள் சங்கத்தின் 46வது வருடாந்த சபைக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.46வது வருடாந்த மாநாடு கடந்த 22ம் திகதி தங்கல்லயில் ஆரம்பமானது. நேற்று நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
 
சுற்றுலாத்துறை  துறையின் மூலம் அந்நியச் செலாவணியை அதிகரிக்க முடிவதோடு தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும். அதேபோல் நாட்டின் கடனை தீர்க்கக்கூடிய வல்லமையும் காணப்படுகின்றது. கடந்த 2 வருடங்களுக்குள் நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு;ள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு மேலும்  தெரிவித்தர்.

வருடாந்தம் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பது அரசாங்கத்தின் இலக்கு வருடாந்தம் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பது அரசாங்கத்தின் இலக்கு Reviewed by Madawala News on 9/25/2017 08:49:00 AM Rating: 5