tg travels

சமகால அரசாங்கத்தின் அடுத்துவரும் 8வருடத்திற்கான பொருளாதார கொள்கை வெளியீடு




சமகால நல்லாட்சி இணக்கப்பாட்டு அரசாங்கத்தினால் எதிர்வரும் 8 வருட காலத்திற்காக வகுக்கப்பட்ட பொருளாதாரக்கொள்கை இன்று வெளியிடப்பட்டது.

இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் இன்றுடன் 2 வருடகாலம் பூர்த்தியாகின்றது.
 
இரண்டு கட்சிகளும் இணைந்து 2025ஆம் ஆண்டளவில் எத்தகைய இலக்கை நோக்கி முன்னெடுக்கப்படவேண்டும், அதற்கான தொலைநோக்கு என்ன என்பதை உலகத்திற்கும் நாட்டுக்கும் தெளிவுபடுத்தும் வகையில் 2025 தூரநோக்கு திட்டம் அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்டது.
 
இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமிசிங்க தலைமையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 

இந்த நிகழ்வில் சிங்கள மற்றும் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டது.
 
அரசாங்கத்தின் தொலைநோக்கு திட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டதுடன் இங்கு சமூகமளித்திருந்த இளைஞர்கள் இது தொடர்பாக முன்வைத்த கேள்விகளுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதிலளித்தனர்.
 
இளைஞர் பாராளுமன்றத்தில் உறுப்பினரான மட்டக்களப்பை சேர்ந்த யுவதி ஒருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதன்போது கேள்வி எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள வெளிநாட்டுதூதுவர்கள் , உயர்ஸ்தானிகர்கள் அமைச்சர்கள் ,இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

தனிநபர் வருமானத்தை வருடத்திற்கு 5000 டொலராக அதிகரித்தல், அனைவருக்கும் ஓய்வூதியம் தேவையுடையோர் அனைவருக்கும் சமுர்தி என பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சமகால அரசாங்கத்தின் அடுத்துவரும் 8வருடத்திற்கான பொருளாதார கொள்கை வெளியீடு சமகால அரசாங்கத்தின் அடுத்துவரும் 8வருடத்திற்கான பொருளாதார கொள்கை வெளியீடு Reviewed by Madawala News on 9/04/2017 07:34:00 PM Rating: 5