Ad Space avaiable

எட்டு கோடியே 80 லட்சம் ரூபாய் இலங்கை பணத்தை துபாய் எடுத்து செல்ல முயற்சித்த இலங்கை இளம் ஜோடி சிக்கியது.



எட்டு கோடியே 80 லட்சம் ரூபாய் சட்டவிரோத பணத்துடன் இளைஞர் மற்றும் யுவதியொருவரும் கட்டுநாயக்க சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பணத்தை நாட்டில் இருந்து வெளியே கொண்டு செல்ல முற்பட்ட போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் 24 வயதானவர் என்பதுடன், யுவதி 22 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நேற்று மாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து டுபாய் செல்ல முற்பட்ட போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
எட்டு கோடியே 80 லட்சம் ரூபாய் இலங்கை பணத்தை துபாய் எடுத்து செல்ல முயற்சித்த இலங்கை இளம் ஜோடி சிக்கியது. எட்டு கோடியே 80 லட்சம் ரூபாய் இலங்கை பணத்தை துபாய் எடுத்து செல்ல முயற்சித்த இலங்கை இளம் ஜோடி சிக்கியது. Reviewed by Madawala News on 9/22/2017 08:17:00 AM Rating: 5