Kidny

Kidny

ரக்கைனில் உள்ள சகல மக்களையும் பாதுகாத்து வருகிறோம். முதல் தடவையாக வாய் திறந்த ஆங் சாங் சூகி.


மியன்மாரில் ரக்ஹைன் மாநிலத்தில் இருக்கும் ரொஹிங்யா முஸ்லிம்களின் மீதான வன்முறைகள் தொடர்பாக முதற்தடவையாக கருத்து தெரிவித்திருக்கும் அந்நாட்டின் ஆளும் கட்சியின் தலைவரான ஆங் சான்சூகி மியன்மார் அரசாங்கம் ரக்ஹைனில் உள்ள சகல மக்களையும் பாதுகாத்துவருவதாக  குறிப்பிட்டுள்ளார்.

 ஆனால், பயங்கரவாதிகளின் நலன்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த மோதல்கள் குறித்து தவறான தவல்கள் பாரிய பனிமலைபோல் காணப்படுவதாகவும் ஆங் சாங் சூகி கடுமையாக விமர்சித்துள்ளார்.


 துருக்கி ஜனாதிபதி தபீப் எர்டோகலுடனான தொலைபேசி உரையாடல் ஒன்றின் போதே ஆங் சான்சூகி இவ்வாறு கூறியுள்ளார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் 123ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேஷிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு எதிரானவன்முறைகள் தொடர்ந்து அவர்கள் இடம்பெயர்த் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 ரோஹிங்யாமுஸ்லிம் மக்களுக்கு எதிராக கடந்த பல வருடங்களாக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தாலும் இம் முறை அதிகளவானோர் இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மை மக்களே அதிகளவில் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர். இந்த விடயம் தொடர்பாக நோபல் சமாதான பரிசினை பெற்றுக் கொண்டிருந்த ஆங் சாங்சூகி எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவித்திருக்கவில்லை சான்று கடுமையாக விமர்சிக்கப்பட்டி வந்தது.


 இவ்வாறான நிலையில் முதற்த டவையாக தனது நிலைப்பாட்டை ஆங் சான் சூகி பதிவு செய்திருக்கி றார். சாத்தியமான சகல வழிகளையும் பயன்படுத்தி ரக்கைனில் இக்கும் மக்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக துருக்கி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.


 "நாம் இதனை நன்கறிந்திருக்கிறோம். சகலரையும் விட இந்த விடயத்தில் போதிய தெளிவு எம்மிடம் உள்ளது. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக பாது காப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என்று ஆங் சாங் சூகி குறிப்பிட்டுள்ார். ' எமது நாட்டில் இருக்கும் சகல மக்களின தும் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது. அரசியல் ரீதியாக மட்டுமல்லாது மனிதாபிமான மற்றும் சமூக ரீதியாக அடிப்படைகளிலும் அவர் களுக்கான உரிைைகளை நாம் வழங்க வேண்டும் சான்றும் ஆங் சான் சூகி கூறியுள்ளார் .

 ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி முதல் அதிகளவான முஸ்லிம்கள் இடம்பெ யர்ந்து வருகின்றனர். அவர்கள் பங்களாதே ஷில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
ரக்கைனில் உள்ள சகல மக்களையும் பாதுகாத்து வருகிறோம். முதல் தடவையாக வாய் திறந்த ஆங் சாங் சூகி. ரக்கைனில் உள்ள சகல மக்களையும் பாதுகாத்து வருகிறோம். முதல் தடவையாக வாய் திறந்த ஆங் சாங் சூகி. Reviewed by Madawala News on 9/07/2017 03:18:00 PM Rating: 5