Kidny

Kidny

விளக்க மறியலில் இருந்த முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது அஜ்மீர் பத்து வருடத்திற்கு பின் நிரபராதியாக விடுதலை.


கடந்த 2008 ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பெயரில்  பொலிசாரால் கைது  செய்யப்பட்டு  சுமார் 10  வருட காலம் விளக்கமறியலில்  இருந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகரை கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிரபராதியென தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளார்.

தாவூத்  முகம்மது அஜ்மீர் என்ற முன்னாள் பொலிஸ்இன்ஸ்பெக்டரையே நீதவான் விடுதலை  செய்துள்ளார்.

விடுதலைப்புலி இயக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக கூறி  பொலிஸ் பரிசோதகர் டி.எம். அஜ்மீரை பயங்கரவாத தடுப்பு விசாரணை பொலிசார் கடந்த 2008.02.29 கைதுசெய்து சுமார் 2 வருட காலம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்து கடந்த 2010ம்ஆண்டு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதாக கூறி கொழும்பு மேல்நீதி மண்றத்தில் இரண்டு வழக்குகளையும் கம்பஹா நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளையும் சட்டமா அதிபர் ஊடாக தாக்கல் செய்திருந்தனர்.

சுமார் 7வருடகாலம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் மேல் நீதிமன்ற நீதிபதி  பியேசன ரணசிங்க கடந்த ஜூன் மாதம் 23ம் திகதி குறித்த ஒப்புதல் வாக்கு மூலம் சந்தேகநபரால் சுயாதீனமாக வழங்கப்பட்டவை அல்லவென தீர்ப்பளித்து அவர் மீது சுமத்தப்பட்டிருந்த இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்து சந்தேக நபர் நிரபராதி என தீர்ப்பளித்திருந்தார்.

குறித்த நான்கு வழக்குகளையும் சட்டமா அதிபர் சந்தேக நபர் மீது ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்திருந்ததால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு கடந்த 07ம் திகதி சந்தேக நபருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த இரண்டு வழக்குகளையும் வாப்பஸ் பெற்றதை தொடர்ந்து நீதிபதி பிரியந்த பெனாண்டோ சந்தேக நபரை நிரபராதி என தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளார்.

கொலன்னாவை நிருபர் - ரிஸ்வி  காமில் 
விளக்க மறியலில் இருந்த முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது அஜ்மீர் பத்து வருடத்திற்கு பின் நிரபராதியாக விடுதலை. விளக்க மறியலில் இருந்த முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது அஜ்மீர் பத்து வருடத்திற்கு பின் நிரபராதியாக விடுதலை. Reviewed by Madawala News on 9/08/2017 09:35:00 PM Rating: 5