Kidny

Kidny

மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் 6ஆவது உலக முதியோர் தினம்-2017


மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம், 6ஆவது தடவையாக உலக முதியோர் தினத்தை, ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.9.15 மணிக்கு, மடவளை மதீனா தேசிய பாடசாலையின், அஷ்ர்ஃப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடத்தவுள்ளது.

இவ்வைபவத்திற்குப் பிரதம அதிதியாக எமது ஊரைச்சேர்ந்த சர்வதேச பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கல்வீட்டு அல்ஹாஜ்.லத்தீப் பாரூக்  அவர்களும், கௌரவ அதிதிகளாக அல்ஹாஜ்.H.M.சம்சுதீன் (கொழும்பு சப்ராஸ் ட்ரேடர்ஸ் உரிமையாளர்) பிரசித்தி பெற்ற இரத்தினக்கல் வியாபாரிகளான அல்ஹாஜ்.F.சமீன் அவர்களும், அல்ஹாஜ்.M.B.M.சஹீல் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

அன்றைய தினத்தில்
#  2016ஆம் ஆண்டில், ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற
26மாணவர்கள் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு,பரிசுகள் வழங்கிப்   பாராட்டப்படவுள்ளனர்.

#  2016ஆம் ஆண்டு GCE O/L பரீட்சையில் ஆங்கிள பாடத்தில் A சித்தி                           பெற்று,உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு, அண்மையில் வபாத்தான ஜலீல் டீச்சரின் நினைவுப்பரிசும் வழங்கப்பட உள்ளது..

#  சகல பாடங்களிலும் A (9A) சித்தி பெற்ற 5 மாணவர்கட்கு பரிசுகள்                   வழங்கப்படவுள்ளன.

#  தேர்ந்தெடுக்கப்பட்ட 25 முதியோர்கட்கு, ரூபா:2000/= பெறுமதியான போஷாக்கு உணவுப்பொதியும் வழங்கப்பட உள்ளது.

    எனவே இவ்வைபவத்திற்கு, எமது சங்கத்தின் சகல அங்கத்தவர்களையும், அங்கத்தவராவதற்கு தகுதி பெற்றவர்களையும், மடவளையிலுள்ள சகல சங்கங்கள், நிறுவனங்களின் நிருவாகக்குழு உறுப்பினர்களையும், 2016 ஆம் ஆண்டுகளில் புலமைப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் பெற்றோர்களையும், 2017ல் தரம் நான்கில் கல்வி கற்கும் சகல மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும், ,எமது சங்கத்திற்கு நிதியுதவிய சகல அன்பளிப்பாளர்களையும், ஆதரவாளர்களையும் அன்பாய் அழைக்கின்றோம்.

                                           தகவல்:A.L.A.ஜலீல்-
                                           செயலாளர்,
                                          மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம்.


மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் 6ஆவது உலக முதியோர் தினம்-2017 மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் 6ஆவது உலக முதியோர் தினம்-2017 Reviewed by Madawala News on 9/29/2017 09:02:00 AM Rating: 5