Kidny

Kidny

தேசிய போட்டி... கிழக்கு மாகாண அணி சார்­பாக கலந்­து­கொண்ட பாலுராஜ் தொடர்ச்­சி­யாக 6ஆவது முறை­யா­கவும் தங்கம்.


43 ஆவது தேசிய விளை­யாட்டு விழாவின் கராத்தே போட்­டிகள் கண்டி திகன உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­றன. இப்­போட்­டியில் கிழக்கு மாகாண அணி சார்­பாக கலந்­து­கொண்ட பாலுராஜ் கராத்தே -டூ போட்­டியில் கலந்­து­கொண்டு தங்­கப்­ப­தக்கம் வென்றார்.

இவர் தொடர்ச்­சி­யாக 6ஆவது முறை­யா­கவும் தனது சிறப்­பான திற­மை­களை வெளிப்­ப­டுத்தி முத­லி­டம்­பெற்று தங்­கப்­ப­தக்கம் வென்­றுள்­ள­தோடு தெற்­கா­சிய கராத்தே போட்­டி­களில் கலந்­து­கொண்டு 3 முறை தங்­கப்­ப­தக்கம் வென்­றுள்­ள­மையும் விசேட அம்­ச­மாகும்.

பாலுராஜ் அம்­பாறை மாவட்ட கல்­முனை தமிழ் பிர­தேச செய­லக பிரிவில் உள்ள சேனைக்­கு­டி­யி­ருப்பைச் சேர்ந்­தவர். இவர் JKMO கழ­கத்தின் கிழக்கு மாகா­ணத்தின் பிர­தம போத­னா­சி­ரி­ய­ரான எஸ்.முரு­கேந்­திரனின் பயிற்­று­விப்பில் பல்­வேறு போட்­டி­களில் வெற்றி பெற்று சாதனை நாய­க­னாக திகழ்­கின்றார்.

தனது வெற்­றிக்கு உறு­து­ணை­யாக இருந்த தனது தாயார் மற்றும் குடும்­பத்­தினர் பயிற்­று­விப்­பா­ள­ரான தமது சகோ­தரர் எஸ்.முரு­கேந்­திரன், அம்­பாறை மாவட்ட விளை­யாட்டு உத்­தி­யோ­கத்தர் வே.ஈஸ்­பரன், பிர­தேச செய­லாளர் எஸ்.லவ­நாதன், கிழக்கு மாகாண விளையாட்டு பணிப்பாளர் எம்.மதிவண்ணன் உள்ளிட்டோருக்கு பாலுராஜ் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தேசிய போட்டி... கிழக்கு மாகாண அணி சார்­பாக கலந்­து­கொண்ட பாலுராஜ் தொடர்ச்­சி­யாக 6ஆவது முறை­யா­கவும் தங்கம். தேசிய போட்டி... கிழக்கு மாகாண அணி சார்­பாக கலந்­து­கொண்ட பாலுராஜ் தொடர்ச்­சி­யாக 6ஆவது முறை­யா­கவும் தங்கம். Reviewed by Madawala News on 9/16/2017 12:32:00 PM Rating: 5