Ad Space Available here

வீடியோவை பாருங்கள் .. பாகுபலி செட் தோற்றுவிடும் பிரம்மாண்டம். ஆரம்பர வசதிகளுடன் குர்மீத் ராம் சாமியார் வாழ்ந்த அரண்மனை உள்ளே வீடியோ வெளியானது.


பாலியல்  வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள பாபா குர்மீத் ராம் ரஹீமின் உட்புற அறைக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

ஹரியானாவில் உள்ள ராம்ரஹீமின் அறைக் குள் பொலிசார் சோதனையிடும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.

'பாகுபவி செட் போல மிக பிரம்மாண்டமாக இருக்கும் அந்த அறையில் இருக்கும் காட்சி கள் கண்களை அகல விரிய வைக்கின்றன.

ராஜ சிம்மாசனம் போன்ற இருக்கைகள், அரண்மனைகளில் இருப்பது போன்ற சாப்பாட்டு மேசை என மினி அரண்மனையாகவே இருக்கிறது அந்த அறை. இதையெல்லாம் தாண்டி உள்ளே படுக்கையறையைச் சென்று பார்த்தால் அங்கு போடப்பட்டிருக்கும் கட்டிலும், மெத்தையுமே ராம் ரஹீமின் சொகுசு வாழ்க் கையை உணர்த்துகின்றன. இவற்றைத் தாண்டி ஒவ்வொரு அறையாக புகுந்து பொலிசார் பூட்டப்பட்டிருக்கும் அறைகளை கால்களால் உதைத்துத் திறக்கின்றனர்.


இதில் என்ன பிரமாதம் என்றால் பாபா ராம்தேவ் அமரும் வெண்பட்டு மெத்தையால் ஆன நாற்காலி ஒரு துணி கொண்டு மூடப்பட்டிருக்கிறது. படுக்கையறை மட்டுமே அகன்று விரிந்து சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல படுக்கையறையிலும் கூட பல்வேறு நாற்காலிகள் போடப்பட்டு இருக்கின்றன.


 இந்தக் காட்சிகளை பொலிசாரே பதிவிட்டு வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதேவேளை ராம் ரஹீம் மீதான பாலியல் வழக்கில் ஏரா ளமான அரசியல் தலையீடுகள் இருந்த போதிலும் சிபிஐ அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விட்டவர் முன்னாள் பிரதமர் மன்மோ கன்சிங் என்று சிபிஐ முன்னாள் அதிகாரி தெரி வித்தார் சிற்சாவில் உள்ள தேரா சச்சா சவுதா ஆசி ரமத்தின் சற்று சிரமமான வேலையாக இருந்தது என் தலைமையிலான குழுவினரை ராம் ரஹீமின் அடியாள்கள் மிரட்டினர். பெண் சீடர்களுக்கு மத்தியில் பேரரசர் போல் ராம் ரஹீம் வாழ்ந்து வந்தார்.

தினமும் இரவு 10 மணிக்கு தலைமை பெண் சீடரை அழைத்து தன் படுக்கைக்கு ஒரு சீடரை அனுப்புமாறு ராம் ரஹீம் உத்தரவிடு வார். அதுவும் அவர் எந்த சீடரைவிரும்புகிறாரோ அவரை இந்த தலைமைச் சீடர் கட்டாயப்படுத்தி சாமியாருடன் படுக்கைக்கு அனுப்புவார். ராம் ரஹீம் அனுபவமுள்ள குற்றவாளிகள் போல் தான் செய்யும் திருட்டுத்தனத்துக்கு ஆதாரமில்லாமல் செய்து வந்தார். அவரது அறையில் ஏராளமான ஆணுறைகளும், கருத் தடை சாதனங்களும் காணப்பட்டன.


 அவர் பெண்கள் மீது வெறி பிடித்தவர் போன்றும் கிட்டத்தட்ட காட்டுமிராண்டி போன்றும் நடந்து வந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது ராம் ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பஞ்சாப், ஹரியானா மாநில எம்பிக்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அழுத்தம் கொடுத்தனர். இந்நிலையில் சிபிஐ முன்னாள் தலைவர் விஜய் சங்கரை அப்போதைய பிரத மர் மன்மோகன் சிங் அழைத்தார்.


 அப்போது சீடர்களின் முறைப்பாட்டு படித்துப் பார்த்த மன்மோகன்சிங், ராம் ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எங்களுக்கு முழு சுதந்திரத்தையும் தந்தார். சட்டப்படி நடந்து கொள்ள அறிவுறுத்தினார் மன்மோகன் சிங், விஜய் சங்கரிடம் கூறுகை யில், இரு பெண்கள் நீதிபதி முன்பு என்ன வாக்குமூலம் அளித்தார்களோ அதன்படி செல்லுங்கள் சட்டப்படி உங்கள் விசாரணை இருக்கட்டும். அரசியல் ரீதியிலான நெருக்கடி களை பற்றி கவலைப்படாதீர்கள். அந்த பெண் களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறினார்.


 ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அர சியல் செல்வாக்கு மிக்க எம்.பிக்கள், ராம் ரஹீ முக்கு எதிரான வழக்கை முடித்து விடுங்கள் என்று சிபிஐ அமைப்பின் தலை வராக இருந்த விஜய் சங்கரிடம் கேட்டனர். எனினும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இந்த வழக்கு விசாரணையில் முன்னாள் பிரதமரும், சிபிஐ முன்னாள் தலை வரும் எங்களுக்கு முழு சுதந்திரம் அளித்தனர். தற்போது ராம் ரஹீ முக்கு 20 ஆண்டுகள் தண்டனை என்பது திருப்திகரமானது. இரு கொலைகளுக்காக அவருக்கு மேலும் தண்டனை கிடைக்கும்" என்றார் நாராயணன்,


இதுஒருபுறமிருக்க, பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவுடன் பொலிஸாரிடம் இருந்து தனது ஆதரவாளர்களுடன் தப்பிக்க ராம் ரஹீம் இரகசிய வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். நீதிபதி 20 ஆண்டுகள் சிறைதண்டனையை விதித்தார். இதனால் நிலைகுலைந்த ராம் ரஹீம், எப்படியாவது தப்பிக்க வேண்டும் என் பதற்காகவே தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறினார். இதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று சான்றிதழ் வழங்கப்பட்டது.


 சிறையில் அடைக்க சாமியார் கொண்டு செல்லப்பட்ட போது அவரது ஆதரவாளர்கள் இடையூறு ஏற்படுத்தி தப்பிப்பதற்காக ஒரு இரகசிய வார்த்தையை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறை ஐஜி கே கே ராவ் கூறுகையில், சாமியார் கைது செய்யப்பட்ட போதே அவர் சிர்சாவில் இருந்து சிகப்பு நிறத்திலான பையை தன்னுடன் கொண்டு வந்தார். தண்டனை பெற்ற போது தனது வாக னத்தில் உள்ள சிவப்பு பையை கொண்டு வாருங்கள் என கூறினார். அதில் தான் உடுத் தும் ஆடைகள் உள்ளது என்றும் கூறினார். ஆனால் சிவப்பு கொண்டு வாருங்கள் என்பது அவர் தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்த இரகசிய சொல்லாகும்.


இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தினால் அவரது ஆதரவாளர் கள் அங்கு கலவரத்தில் ஈடுபடும் சமயத்தை தனக்கு சாதமாக்கி தப்பிக்க ராம் ரஹீம் நினைத்திருந்தார். அவரது பை வாகனத்தில் இருந்தது. ஆனால் சிறைச் சாலையை சுற்றி 2 முதல் 3 கி.மீ. தூரத்தில் இருந்து கண்ணிவெடி வெடித்தது போன்று சப்தம் கேட்டது. இதனால் நாங்கள் உஷாரானோம். சிவப்பு பையை கொண்டு வாருங்கள் என்றால் ஏதோ அசம்பாவிதம் நேரப் போகிறது என்பது அர்த்தம் என்பதை புரிந்து கொண்டோம் முதலில் சிவப்பு பையை கொண்டு வாருங்கள் என்பதை அவரது தப் பிப்பதற்கான திட்டம் என்பதை உணர்ந்தோம், இரண்டாவது அவரது ஆதரவாளர்கள் சரியான சமயத்துக்கு காத்திருந்தது. மூன்றாவது 70 வாகனங்களில் ஆள்கள் நின்றிருந்தது ஆகிய வற்றை வைத்து புரிந்து கொண்டோம்.

தண்டனை பெற்றவுடன் ராம் ரஹீமை அவர் வந்த வாகனத்தில் அமரவைப்பதை விட எங்க ளது பொலிஸ் வாகனத்தில் அமரவைத்து பாது காப்புடன் அழைத்துச் சென்றோம். சாமியாரின் ஆதரவாளர்கள் 70 முதல் 80 வாகனங்களில் அங்குள்ள தியேட்டர் அருகே இருந்ததையும் நாங்கள் அறிந்தோம். இதனால் கலவரம் ஏதேனும் நடந்தால் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழக்கக் கூடும் என்பதால் அது நடைபெறாத வண்ணம் மாற்றுப் பாதையில் அவரை அழைத்து சென்றோம். ராம் ரஹீமை எங்கே கொண்டு சென்றோம் என்பதை தெரி யாமல் அவரது ஆதரவாளர்கள் விழித்தனர். நீதிமன்ற வளாகத்தில் அவரது வளர்ப்பு மகள் எனக் கூறப்படும் ஹனிபிரித்தும் நின்றிருந் தார் "என்று விஜய்சங்கர் கூறினார்.


இதேவேளை ராம் ரஹீமுக்கு தீர்ப்பு வழங் கிய நீதிபதிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொலைமிரட்டல்கள் வந்தபடியுள்ளன. ராம் ரஹீம் ஆதரவாளர்கள்தான் இவ்வாறு மிரட்டல்கள் விடுப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிபதிக்கு இசெட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு வளையத்தில், போலீசார். தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் இருப்பார்கள். நீதிபதியோடு அவரது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங் குவார்கள்.
வீடியோவை பாருங்கள் .. பாகுபலி செட் தோற்றுவிடும் பிரம்மாண்டம். ஆரம்பர வசதிகளுடன் குர்மீத் ராம் சாமியார் வாழ்ந்த அரண்மனை உள்ளே வீடியோ வெளியானது. வீடியோவை பாருங்கள் ..  பாகுபலி செட் தோற்றுவிடும் பிரம்மாண்டம். ஆரம்பர வசதிகளுடன் குர்மீத் ராம் சாமியார் வாழ்ந்த அரண்மனை உள்ளே வீடியோ வெளியானது. Reviewed by Madawala News on 9/01/2017 03:14:00 PM Rating: 5