Kidny

Kidny

அரசை கவிழ்க்க இடம்பெறும் சூழ்ச்சிகளை முஸ்லிம் காங்கிரசும், தமிழ் தேசிய கூட்டணியும் சேர்ந்து முறியடிப்போம்.


அரசியலமைப்பிற்கான நடவடிக்கைகளை சீர்குலைத்து அரசாங்கத்தைக் கவிழ்க்க சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியினரின் செயற்பாடுகளை முறியடிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் எத்தனை தியாகங் களைச் செய்யவும் தயாராகவுள்ளது.
என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்துக்கு 18 தட வைகள் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி என்ற பெருமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே சாரும் என குறிப்பிட்ட முதலமைச் சர் கிழக்கு மாகாணத்தை விவசாய ஏற்றுமதிக்கான கேந்திர நிலையமாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியின் முழுமையான ஒத் துழைப்பு கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கர டியனாறு விவசாய பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலை மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம, பிரதிய மைச்சர் அமீரலி, மாகாண விவசாய அபிவிருத்தியமைச்சர் துரைராஜசிங் கம் ஆகியோர் கலந்துகொண்ட இந் நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற் றிய முதலமைச்சர்:
புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண் பதையே தமிழ், முஸ்லிம் மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக் கின்றனர்.


இதற்கான நடவடிக் கைகளைப் பல் வேறு சவால் கள் தடைகளுக்கு மத்தி யிலும் மேற்கொண்டு வருகின்றது. இதற்கெதிராக கூட்டு எதிர்க்கட்சி செயற்பட்டு வரும்நிலையில் அந்த எதிர்ப்புகளை முறியடிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப் பும் எத்தகைய தியாகங்களைச் செய் யவும் தயாராகவுள்ளது.


நாம் நம்புகின்ற ஒரே தலைவர் மைத்திரிபால சிறிசேன மட்டுமே. அவரது தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவருக்கு பூரண ஒத்துழைப்பு வழங் குவதாகவும் முதலமைச்சர் தெரிவித் தார்.
அரசை கவிழ்க்க இடம்பெறும் சூழ்ச்சிகளை முஸ்லிம் காங்கிரசும், தமிழ் தேசிய கூட்டணியும் சேர்ந்து முறியடிப்போம். அரசை கவிழ்க்க இடம்பெறும் சூழ்ச்சிகளை முஸ்லிம் காங்கிரசும், தமிழ் தேசிய கூட்டணியும் சேர்ந்து முறியடிப்போம். Reviewed by Madawala News on 9/01/2017 04:25:00 PM Rating: 5