Kidny

Kidny

சகோதரனே, ஸதகதுல் ஜாரியாவை அலங்கரித்தவன் நீ.....



இறைவனுக்கு
நெருங்கிய ஆத்மா
ஒன்று
சுவனத்தை நோக்கி
பயணிக்கின்றது....
சகோதரனே,
ஸதகதுல் ஜாரியாவை
அலங்கரித்தவன்
நீ.....
சுயநலம் கொண்ட
உலகினில்
பொது நலமானது
உன் செயல்
எல்லோரின் கையேந்தும்
கரங்களிலும்
பிரார்த்தனையானாய்
நீ
இன்றிருக்க,
உன் பெற்றோரின்
அன்பு மகனாய்
என்றும் நிலை
பெற்றிருப்பாய்

அறுபது வரை
வாழ்ந்தவனும் சிந்திப்பான் உன்னைப்பார்த்து,
நீ செய்த
போராட்டங்களை பொருந்திக்கொள்ளட்டும்
அந்த அருளாளனும்
சகோதரனே,
உன் ஆத்மாவினை
வரவேற்க
மலக்குகளும் காத்திருக்க,
நீயோ,
றப்பின்
சோதனைகளைகளை
வெற்றிகொண்டு
உலகிற்கு விடை கொடுத்துவிட்டாய்....

By Nifrina nazim -
சகோதரனே, ஸதகதுல் ஜாரியாவை அலங்கரித்தவன் நீ..... சகோதரனே, ஸதகதுல் ஜாரியாவை  அலங்கரித்தவன் நீ..... Reviewed by Madawala News on 9/13/2017 08:34:00 AM Rating: 5