Kidny

Kidny

ஜனாஸாவின் சடங்குகள்.... நாட்டு சட்டமும் தெரியாது! மார்க்க சட்டமும் தெரியாது!


நாட்டு சட்டமும் தெரியாது! 
மார்க்க சட்டமும் தெரியாது!

ஜனாஸா விடயத்தில் அநேகமான ஊர் வழமைகள்
மேற்சொன்ன இரண்டிற்கும் முரண்பட்டதாகவே காணப்படுகின்றன.

மார்க்கத்தில் இல்லாத அதாவது நபியவர்கள் காட்டித்தராத எந்த இபாதத்தும் ஊர்வழமை என்ற பெயரில் சமூகத்தில் தினிக்க யாருக்கும் அதிகாரமில்லை. அது பள்ளி நிர்வாகமாக இருந்தாலும் சரி.

குறிப்பிட்ட ஒரு செயல்பாடு "பித்அத்" என்று நன்றாகவே தெரிந்தும் ஊர் வழமை என்று தூக்கிப்பிடித்து  அதனை நிலைநாட்ட வாக்குவாதப்படும் அவல நிலையை ஊர் நிர்வாகிகளிடம் காண முடிகிறது.

ஜனாசா விடயத்தில் அந்த ஜனாஸாவின் உரிமையாளருக்கே அதனது சகல மரண சடங்குகளை முன்னெடுக்கும் உரிமை உள்ள நிலையில் நாட்டு சட்டமும் இதைனையே வழியுறுத்துகிறது.

மையவாடிக்கு பொறுப்பாக(பராமரிப்பு) இருப்பவர்கள் அடக்கம் செய்தல் மற்றும் சடங்குகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று ஜனாஸாவின் உரிமையாளருக்கு நிபந்தனை போடமுடியாது. அவர்களது நிர்வாக ஒழுங்கு/கட்டுப்பாடு இந்த இடத்தில் செல்லுபடியாகாது.

யாரும் மையவாடியைப் பராமரிக்கலாம். ஆனால் தனி நபர்கள் மையவாடிக்கு சொந்தம் கொண்டாட முடியாது. அதிகபட்சம் அடக்கம் செய்யும் இடத்தை (தொடர் வரிசை) வேண்டுமானால் காட்டலாம்.
இது தவிர மரண சடங்குகளில் எதனை எவ்வாறு செய்வது என்று முடிவெடுக்க ஜனாஸாவின் உரிமையாளர்களுக்கே உள்ளது.

மாறாக, மையவாடியை பராமரிப்பவர்கள் ஜனாஸா உரிமையாளரின் விருப்பப்படி அடக்கம் செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றே நாட்டு சட்டம் சொல்கிறது.
அது தனி நபராகவோ குறிப்பிட்ட ஒரு பிரிவினராகவோ இருக்கலாம்.

நபிவழிப்பிரகாரம் தமது மார்க்க விடயங்களை நடைமுறைப்படுத்த முனைபவர்களுக்கு இலங்கை அரசியல் யாப்பு ஒரு வரப்பிரசாதமாகும். இதனை அத்தனை முஸ்லிம்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே முஸ்லிம் மையவாடிகளப் பராமரிப்பார்கள் இன்னமும் ஊர் வழமை என்ற பிடிவாதத்தில் அடம்பிடிப்பீர்களானால் தெளிவு பெற்ற ஜமாத்தார்களின் உரிமை மீறளை (நீங்கள்) செய்து சட்டத்தின் முன் குற்றவாளியாகி தலைகுனிய வேண்டியேற்படும்.

இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமில்லை குர்ஆன் சுன்னா வழி நடக்க விரும்பும் தனி நபர்களும் தமது உரிமயை நிலைநாட்ட கலம் இறங்கியுள்ளதால் நீங்கள் சத்தியத்தின் பக்கம் வருவதே சரியான நடுநிலையான தீர்வாகும். இதுவே பிரச்சினைகளை இல்லாமலாக்கி ஊர் ஒற்றுமை மறுமை வெற்றி இரண்டும் கிடைக்கும்.

குறிப்பு: இது விமர்சனமல்ல.  உபதேசம். பல ஊர்களில் ஜனாஸாக்களை நபி வழியில் அடக்கம் செய்ய வேண்டும் என்பவர்களின் உரிமை அந்த ஊர் நிர்வாகிகளால் மறுக்கப்படுகிறது. எனவேதான் பொதுவாக இதனை எழுதியுள்ளேன்.

சுல்பி சமீன்.
11-09-2017
ஜனாஸாவின் சடங்குகள்.... நாட்டு சட்டமும் தெரியாது! மார்க்க சட்டமும் தெரியாது! ஜனாஸாவின் சடங்குகள்.... நாட்டு சட்டமும் தெரியாது! மார்க்க சட்டமும் தெரியாது! Reviewed by Madawala News on 9/11/2017 09:00:00 PM Rating: 5