Kidny

Kidny

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் (?) அவதானங்களும் தீர்வுகளும் .கல்முனை தமிழ் பிரதேசசெயலக விவகாரமானது ஒரு  பேசுபொருளாக மாறியிருக்குமிந்த சந்தர்ப்பத்தில் அது தொடர்பான விடயங்களைத் தெளிவு படுத்தி  பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டியுள்ளது காலத்தின் கட்டாயமாகும் .

இங்கு  இந்த விடயம் தொடர்பாக  அரசியல் ரீதியாக நடந்துள்ள தவறுகள் பற்றி அதிகம் அலுத்துக் கொள்ளப் படவில்லை .  தவிர நடைமுறைச் சாத்தியங்கள் நிர்வாக ரீதியானவிடயங்களைப்   பற்றியே இங்கு அதிகம் பேசப்படுகிறது.

பிரச்சினைகளின் தோற்றுவாய் அதன் வரலாறு அதன் தற்போதைய நிலை என்ன என்பன பற்றி மேலதிகமாக அறிய விரும்புவோர்  சகோதரர் நசீர் ஹாஜியாரின் கட்டுரை மூலம் அறிந்துகொள்ளலாம்.

 இணைப்பு ( https://www.facebook.com/nazeer.haji.9/posts/764736413715444 )

 நிலத்தொடர்பற்று தமிழ் மக்கள் வாழும் இடங்களை மட்டும் நிருவாகம் செய்யும் முறையில் கல்முனை பிரதேச செயலகத்தின் ஆளனியிலிருந்து உப பிரதேச செயலாளர் ஒருவரின் கீழ் உத்தியோகப் பற்றற்று இவ்வலுவலகம் இதுவரை இயங்கிவந்துள்ளது .

அமைச்சர் அஷ்ரப் கல்முனையின் தமிழ் பிரதேச செயலகத்தைஅங்கீகரித்தது வட கிழக்கு  இணைப்புக்குள் நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகு என்ற முஸ்லிம்காங்கிரஸின்  நிலைப்பாட்டைடை இதயசுத்தியுடன் தமிழ் மக்களுக்கு நடைமுறையில் புரியவைக்கவவே என்பதை அவரின் உரைகள் பிரசுரங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்

தமிழ் பி.செயலகம் என்பது எவ்வகையிலும் உத்தியோகபூர்வமற்ற உப அலுவலகமாயினும் அது இன்றுவரை இயங்க இதுவே காரணமாகும் .

அரசியல் பூச்சாண்டிகள் 
++++++++++++++++++++++
அமைச்சர் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் கல்முனையில் அதுவரை  இருந்துவந்த அரசியல் அதிகாரம் வலுவிழந்தது இந்த நிலையில் இந்த உப அலுவலகத்தை தரமுயர்த்த பலமுயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுவந்துள்ளன .

இவ்வாறான முயற்சிகளின்போது முஸ்லிம் தரப்பிலிருந்து முட்டுக்கட்டைகளும்போடப்பட்டுவந்துள்ளன . காரணம் முஸ்லிம்கள் தமிழர்கள் ஒன்றாக இருக்கும் கல்முனை பிரதேச செயலக எல்லைக்குள் ஒரு நிலத்தொடர்புள்ள எல்லையை போடும்போது  முஸ்லிம்களின் பாரம்பரிய எல்லைகள் களவாடப்பட்டுவிடும் என்ற நோக்கத்திலாகும் . அதை விட நூற்றாண்டுகளாக நிலவிவந்த எல்லைகளை விட்டு புதியஎல்லைகளை விட்டுக் கொடுப்புடன் நிரணயம் செய்துகொள்ளவே முடியாதென்பது இன்னொரு முக்கிய விடயமாகும்.

தமிழ்த்தரப்பு அரசியல் இதனை தரமுயர்த்துவதைக் கொண்டு தனது  அரசியலையும் முஸ்லிம் தரப்பு அதனை தடுப்பதனையும்
  தேர்தல் காலங்களிலும் அதற்கு பின்னரும் புரளிகள் கிளப்பிவிடுவதையும் வீரசாகசக் கதைகளை அரசியல் மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுவதையும் கொண்டு தனித்துவ அரசியலைச் செய்து இப்பிரதேச மக்களுக்குரிய முறையான அபிவிருத்தியை  செய்யாமல் பாழடைய விட்டிருக்கின்றனர் (இரு தரப்பினரும்) . இறுதியாக 2013களில் ஒரு முயற்சி பலமாக மேற்கொள்ளப்பட்டு அதனை தற்போதைய பிரதி அமைச்சர் மற்றும் முஸ்லிம்காங்கிரஸ் தலைமை என்பன தடுத்ததாக ஊடகங்களில் வாசிக்ககிடைத்தது. இருந்தபோதும் இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு பற்றி இதுவரையில் ஆக்க பூர்வமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப் படவில்லை என்பதே உண்மையாகும் .


 சனத்தொகை அதிகாமாக இருப்பினும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கூரையில் இருக்கவேண்டும் என்று காலகாலமாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் சிந்தித்தாலும் ,பெரும் பெரும்  நகர அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிப் பேசிக்கொண்டாலும் இரண்டு அலுவலகங்களையும் ஒரே இடத்தில் நடாத்தக் கூடியளவு வசதியுள்ள ஒரு அலுவலகத்தையேனும் இவர்கள் இன்னும் கட்டி இந்தப் பிரச்சினையை முடிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நிலத்தொடர்புள்ள வரைபடம் ?
++++++++++++++++++++++++++++

கல்முனை பி.செயலகத்திலுள்ள கிராம சேவகர் பிரிவு படங்களில் வயலுக்குள்எல்லை இல்லை.  அம்பாறை கி.சே பிரிவுகளை கணணி மயப்படுத்தும்போது எல்லா நிலமும் கி.சே பிரிவுகளுக்குள் வரவேண்டும்  என்ற அடிப்படையில் மாவட்டத்தினை கி.சே.பிரிவுகளாக பிரித்து GIS Map ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன. இதற்கு கல்முனை பி.செயலகம் தன்னிடம் இருந்த 1990 ஆமாண்டு நில அளவைத்திணைக்களத்தினால் வரையப்பட்ட படத்தை அனுப்பியிருந்தது . இந்த படத்தில் எஞ்சியுள்ள இடைவெளிகளை நிரப்பி தமிழ் பிரதேச செயலக கி.சே,பிரிவுகள் வரையப்பட்டுள்ளன. இந்த சதிக்கு துணை நின்றவர்கள் யார்?   கல்முனையின் உத்தியோக பூர்வ செயலாளராக இருந்தவர்கள் அவர்களின் உரிமையைப் பாவிக்கவில்லையா?


அவர்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டார்களா அல்லது அவர்களுக்கும்அறியாமல் சதி செய்யப்பட்டதா?  என்ற கேள்விகள் எழுகின்றன  , கல்முனை பி.செயலக வரைபடத்தில் இல்லாத எல்லைகளைப் போட்டுகொண்டு நிலத்தொடர்புள்ள வரைபடமொன்றைத் தயாரித்து அதனை வர்த்தமானி எல்லை போடும்வரை'

கொண்டுபோய் இருந்தார்கள். கல்முனையின் 63% நிலத்தைக் கொண்ட ஒரு பி.செ. வரைபடத்தை அவர்கள் வரைந்திருந்தார்கள் .( Pictures )

ஆனால்  தமிழ் பிரிவு வைத்துள்ள  வரைபடத்திலுள்ள கி.சே.பிரிவுகளிலுள்ள குடியிருப்பு நிலங்களுக்கு வெளியே உள்ள (வயல் ,சதுப்பு நிலம், நீர் நிலை ) கி.சே.பிரிவு எல்லைகள் செயற்கையானவை ( நில அமைவொடு தொடர்பு படும் தரைத்தோற்றப்பாடுகளை வைத்து இவை வரையப்படவில்லை .உதாரணம் கால்வாய், பண்ட்வீதி , இத்தியாதி .)

இந்த விடயங்கள் கல்முனைப் பிரதேசசெயலாளராக அன்று காணப்பட்ட மங்கள என்பவரிற்கு விளங்கப்படுத்தப்பட்டு  நில அளவைத்திணைக்கள்ம்
உள்ளூராட்சி எல்லை மீள் நிர்ணயக் குழு ,அமைச்சர் ரவூப் ஹக்கீம் ,பிரதி அமைச்சர் ஹரீஸ் என்பவர்கள் முன்னிலையில் கட்டுரையாளரால    சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட   தெளிவு படுத்தல்கள் மூலம் இந்த கிராம சேவகர் பிரிவு எல்லைகள் '
உத்தியோகப்பற்றறவை .என்பதனை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன .

 நற்பிட்டிமுனை கி.சேபிரிவுக வடக்கு தெற்காக கல்முனைக்குடி வரை நீட்டப்பட்டிருந்தன . அதேபோல சேனைக்குடியிருப்பு எல்லைகள் நீண்டு
பெரிய நீலாவணை வரை சென்றிருக்கின்றன .அதைபோல கல்முனைக்குள்இருக்கும் கி.சே பிரிவுகள் பிரதான வீதியைத் தாண்டி வடக்குத் தெற்காக அதற்கு சமாந்தரமாக உள்ள இன்னொரு கற்பனைக் கோட்டில் முடிகின்றது

இவ்வாறாக வரையப்பட்டுள்ள கி.சே பிரிவுகளை வைத்துப் பார்க்கும் போது  கல்முனை மா நகர சபையின் நிலப்பரப்பில் 63% உள்ள கி.சே.பிரிவுகள்
தனித்தமிழ் கி.சே.பி ஆகின்றன. ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறு காணப்படவில்லை.

சேனைக்குடியிருப்பின் கி.சே.பிரிவை வடக்காக நீட்டி பெரிய நீலாவணையுடன் தொடுத்து இதுவரை நிலத்தொடர்பற்ற தன்மையாக இருந்த விடயத்தை நிலத்தொடர்புள்ளதாக ஆக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது . தமது சொந்த  கிராமமான மருதமுனையை ஊடறுத்து சேனைக்குடியிருப்பு கி.சே.பிரிவு
பெரிய  நீலாவணை வரை  சென்றதை பார்த்துக் கொண்டு வாளாவிருந்தாரா அதிகாரமுள்ள உத்தியோகபூர்வ பிரதேசசெயலாளர் ?? என்ற  என்ற பூதாகரமானகேள்விகள் 2013 வட்டாரப்பிரிப்பு சம்பந்தமாக கலந்தாலோசனைகள் செய்யும் போது இந்தப் படங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவில் சமூகத்தின் உள்ளத்தில் எழுந்தன. .

ஆகவே இவ்வாறான முறையாக  நிர்ணயம் செய்யப்படாத எல்லைகளை வரைந்துகொண்டு அவற்றைக் கொண்டு வர்த்தமானிப் பிரசுரங்கள்செய்யப்பட இருந்த சகல முயற்சிகளும் முறியடிக்கப்பட்டு வந்திருந்தாலும் எதிர்காலத்திலும்  இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெற அனுமதிக்க முடியாது. இப்போது உள்ள  எல்லைகளை நில உரிமைக்கேற்ப அந்தந்த நகரங்களின் மேற்கிலுள்ள நிலங்கள் அந்தந்த கிராமங்களுக்குள் அமையும் வகையில் கி.சே.பிரிவுகள் கிழக்கு மேற்காக நீட்டப்படவேண்டும் என்பதையும் கச்சேரியும் நில அளவைத் திணைக்களமும் ஏற்றுக்கொண்டுள்ளன.

 ஒரே பிரதேசசெயலகமாக இயங்குதல் என்னும் தீர்வு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கல்முனை மா நகரசபையிலுள்ள  பிரதேசசெயலகங்களின் எண்ணிக்கை 2 ஆகும் ஒன்று கல்முனை பிரதேச செயலகம் ( உப செயகம் அடங்கலாக ) மற்றயது சாய்ந்த மருது பி,செயலகம். இணைந்த கல்முனை பிரதேச செயலகத்தின் சனத்தொகை ஏறத்தாழ எண்பது ஆயிரங்கள் ஆகும் .இவ்வாறான ஒரு பெரிய பிரதேச செயலகம் தொடர்ந்தும் இயங்குவது தொடர்பான பின்வரும் அவதானிப்புகளைக் குறிப்பிட வேண்டியுள்ளது .

1.0  நிலத்தொடர்பற்று தமிழர் நலன்பேண கல்முனைப் பிரதேச செயலகத்தின் உப- செயலகமாக அதன் கீழுள்ள உப பிரதேசசெயலாளரின் கீழ்  இயங்கினாலும் இது தமிழ் மக்கள் ,அரசியல் வாதிகள் போன்றவர்களால் ஒரு பிரதேச செயலகமாகவே  கருதப்படுகிறது .அம்பாறைக் கச்சேரியும் இதன் உபபிரதேச செயலாளரை ஒரு செயலாளர் போலவே கருதுகிறது.
சனத்தொகை அதிகமாகக் காணபாடுவதாலும் நடைமுறைச் சாத்தியங்கள் கருதி  அனுமதித்துள்ளமை கண்கூடு .

இங்கே பிரதேச இணைப்புக்கூட்டங்கள் சுயாதீனமாக தமிழ் அரசியல் வாதிகளின் தலைமையில் நடாத்தப்படுகின்றன.

முஸ்லிம் அரசியல் வாதிகள் இது தொடர்பாக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் அவ்வப்போது தடுப்போம் பிறகு விட்டுவிடுவோம் என்ற நிலையில் காணப்படுகின்றனர். இவர்கள் ஒரு உறுதியான தலைமைத்துவத்தை வழங்கி தமிழ் மக்களோடு பேசி ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளுவது போலவும் தெரியவில்லை .ஏலவே குறிப்பிட்டதுபோல் நகர அபிவிருத்தி அமைச்சு ,கிழக்கு அபிவிருத்தி அமைச்சு போன்ற பாரிய அமைச்சுக்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கீழிருந்தும் இங்கே ஒரு வசதியான பெரிய அலுவலகத்தை அமைத்தாவது  இந்த அலுவலகத்தை ஒரு கூரையின் கீழ் கொண்டுவந்திருக்கலாம் .ஆனால் அதுவும் நடைபெறவில்லை. இதற்குப் பின்னரும் அவ்வாறு ஒரு திட்டம்   இருப்பதாகவும் அறியப்படவில்லை .

2. இணைந்த பிரதேச சபைக்குள் இன ரீதியான ஒரு எல்லையைப் போடுவதற்கு பொது நிருவாக மட்டும் உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் அமைச்சின் சுற்று நிருபம் தடுக்கிறது . ஆகவே இதை தரம் உயர்த்துவதாயின் நிலத்தொடர்புள்ள எல்லைகளை ஆக்கும் போது இந்த எல்லைகளுக்குள் முஸ்லிம்கள் சிறுபான்மையாக காணப்படுவர் .அதுமட்டுமல்ல முஸ்லிம்களின் கேந்திர வர்த்தக நிலையங்கள் இதற்குள் காணப்படும்.இதனை ஒருபோதும் முஸ்லிம் தரப்பு விரும்பாது . முஸ்லிம் பெரும்பான்மையாகவும் ஒன்றில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் வாழும் இரு பிரதேச செயலகங்களை இதற்குள் நிலத்தொடர்புபட்டு ஆக்குவது முடியவே முடியாத காரியம் ஆகும் .

3.0 கலப்பு முறையில் மாகாண சபைகளின் தொகுதிகளுக்கு எல்லைகள் வரையப்படும் போது  மேலே 2.0 இல் குறிப்பிட்ட காரணிகளினால் கல்முனை பி.செ யலகத்தினூடாக ஊடறுக்கும் வகையில் தொகுதிக்கான எல்லைகள் வரையறுக்கப்படுவதில் பிரச்சினைகள் ஏற்படும் . இதானால் ஒன்றில் இரட்டைஅங்கத்துவம் அல்லது அங்கத்துவமிழப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.  இதே பிரச்சினை பாராளுமன்ற தொகுதிகளை  வரையறுக்கும் போதும் ஏற்படலாம்.

4.0  அதிகரித்த சனத்தொகைக்கேற்ப சேவைவழங்கும் நிலையில்  காணப்படாத போது பிரதேச அபிவிருத்தி குன்றும், ஊர்களுக்கிடையில் சமூகங்களுக்கிடையில் அடிக்கடி பிரச்சினை  ஏற்படும். தேசிய மற்றும் மாகாண அரசியலில் ஏற்படும் தளம்பல் நிலை கல்முனையை வெகுவாகப் பாதிக்கும் இன பிரதேச வேறுபாடின்றி

5.0  மேலே 1.0 இல் குறிப்பிடப்பட்டவாறு கல்முனையின் அரசியல் அதிகாரம் எவ்வாறு அமையப்போகிறது என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.அதாவது புதிய தேர்தல் முறை ..புதிய தொகுதிகளின் அமைவு என்பனவற்றைப் பார்க்கும்ம்போது முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் நலிவடையவே வாய்புக்கள் உள்ளன. எனவே இணைந்திருக்கும் இந்த பிரதேச செயலகம்
ஒரு காலத்தில் பிரிக்கப்படலாம் மாறாத கசப்பான வடுக்களுடன்

பழைய எல்லைகளுடன் 3 ஆகப் பிரிதல்
++++++++++++++++++++++++++++++++++++
இதுவரை குறிப்பிட்ட விடயங்களிலிருந்து கல்முனை பி.செயலகத்தை ஒன்றாக வைத்து அப்படியே நடாத்திச்செல்வதில் பல குழப்பங்களும் சிக்கல்களும் காணபப்டுகின்றன .இதனால் யாரும் பாதிக்கப்படாவகையில் நூற்றாண்டு காலமாக நடைமுறையிலிருந்த பழைய கிராம சபை பட்டின சபை எல்லைகளோடு  இதனைப் பிரிப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாகிறது ,இதற்கான நியாப் படுத்துகை பின்வருமாறு

1.0 அரசாங்க சுற்றறிக்கையின் படிக்கு இடம்பெறும்
( அரச கொள்கைகள் பின்பற்றப்படும் .பொது நிர்வாக அமைச்சின் சுற்று நிருபத்தின் படி இன ரீதியாக எல்லை போட முடியாது)

2.0 வரையறுக்கப்பட்ட எல்லைகள் . ( 1987 ஆமாண்டைய எல்லைகள்உள்ளன ,,,ஆகவே எல்லைகள் வரையறுக்கப்பட முடியும் ..விடயம்
 மிக இலகுவானது )

3,0 அரச நிதிப்பங்கீடு கூடுதலாகக் கிடைக்கும்.

4.0 மக்கள் காலடியில் சேவை

5.0 இதன் எல்லைகளில் உள்ளூராட்சி மன்றம் அமைவதால்மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ள அதிகார அலகினைப் பெற்றுக்கொள்ளலாம்

6.0 பாரம்பரியம் பேணப்படும்.

7.0 இணைந்த மானகர சபையின் நிர்வாக இலகுபடுத்தல் .கோவைகளை ]
ஆளணி , வளங்களை ,வருமானங்களை பங்கிடலாம். மா நகர சபை ,பி,செயலக இணைப்பாடல் , திட்ட நடைமுறை என்பன இலகு,

8.0 இவை எல்லாவற்றையும் விட நீண்ட கால கசப்புணர்வு ஒருவர் மீது பகை நீங்கும்
.
இவை எல்லாவற்றையும் விட 20ம் திருத்தத்தின் பின்னர் 2 மாகாணங்களுக்கான தொகுதிகளுக்கான எல்லைப் பிரிப்பில் பி,செயலகங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும்போது
உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகமாகலாம் மருத முனைக்கு ஒரு அங்கத்துவம் கிடைக்கலாம்.

எனவே சம்பந்தப்பட்ட தரப்புகள் இந்த விடயத்தின் முக்கியத்துவம் அவசரம் கருதி உடனடியாக செயற்பாட்டில் இறங்குமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம் .
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் (?) அவதானங்களும் தீர்வுகளும் . கல்முனை தமிழ் பிரதேச செயலகம் (?) அவதானங்களும் தீர்வுகளும் . Reviewed by Madawala News on 9/25/2017 03:07:00 PM Rating: 5