Ad Space Available here

சர்வ மதங்களுக்குமாக திறந்தது பள்ளிவாயல் கதவு!


– அனஸ் அப்பாஸ் –

செய்யித் அலி எனும் இந்தியர் ஒருவர் பஹ்ரைனில் “Discover Islam” எனும் தஹ்வா அமைப்பின் மூலம் ATMT (Awareness Through Mosque Tour – பள்ளிவாயல் ஊடான தெளிவூட்டல் சுற்றுலா) எனும் திட்டமொன்றை நடைமுறைக்கு கொண்டுவந்தார். பொதுவாகவே முஸ்லிமல்லாதவர்களிடம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் பல்வேறு வழிகள் இருந்தாலும், பள்ளிவாயலுக்குள் பிரவேசிக்க வேண்டுமென்ற ஆவல் சகோதர மதத்தவர்களிடம் அதிகம் இருப்பதால் இது இஸ்லாம் பற்றிய தப்பபிப்ராயங்களைக் களைய சிறந்த திட்டம் என்பதாக அவர் அறிமுகம் செய்தார்.


மார்ச் மாதம் இலங்கையில் இடம்பெற்ற இவ்வனுபவ பெருகைக்கான நிகழ்வில் சகோதர இனத்தவர் ஒருவர் “பள்ளிவாயலுக்குள் கராத்தே பயிற்றுவிப்பு இடம்பெறுகின்றது, நூதனசாலைகளில் காணப்படும் பழங்கால ஆயுதங்கள் இருக்கின்றன என்று எண்ணித்தான் நான் இங்கு பார்க்க வந்தேன்” என்பதாகச் சொல்லியிருக்கின்றார். இவ்வாறான தப்பபிப்ராயங்கள் இருப்பது நியாயமானதுதானே! பிற நம்பிக்கை கொண்டோரை அனுமதிக்காமல்,  பள்ளிவாயலை எமக்கு மட்டுமானது என்று கட்டிப்பிடித்துக்கொண்டு உரிமை கொண்டாடுகின்றோமே!


75 பேரளவில் இம்முறை பங்குபற்றியிருந்தனர். இவர்களில் அநேகர் முஸ்லிம் பெண்களாகவும் இருப்பதைக் கண்டு முஸ்லிம் பெண்கள் வருவதிலும் பிரச்சினையில்லையா? என அங்கு தெளிவுகளை வழங்கிக்கொண்டிருந்த சகோ. ஷிபானிடம் கேட்டேன்.


“அதில் ஆட்சேபனையே இல்லை. எமது முஸ்லிம் பெண்களும் பள்ளிவாயலுக்குள் என்ன நடக்கின்றது என்பது பற்றி அதிகம் தெரிந்திருப்பதில்லை. அவர்களுக்கும் பள்ளிக்கு வர ஆசை இருக்கின்றது. ஆனால், அடுத்தமுறை வரும்போது தமது சகோதர இன நட்புக்களையும் அழைத்துவந்தால் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு பங்களித்தவர்களாக இருப்பர்” என்றார்.


இலங்கையில் உள்ள அரச சார்பற்ற CIS (Centre for Islamic Studies) நிறுவனமானது மார்க்க தெளிவூட்டல் தொடர்பில் பஹ்ரைன் அமைப்புடன் தொடர்பில் இருந்ததால், இலங்கையில் இருந்து, “மஸ்ஜித் ஊடான தெளிவூட்டல் பயிற்சி”க்காக சீனா செல்வதற்கு இந்த நிகழ்ச்சியின் வளவாளர்களுக்கு வாய்ப்பு கிட்டியிருந்தது. அந்த வரிசையில் இலங்கையிலிருந்து அசீப் ஹுசைன் என்பவர் முதலில் சென்று பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் இந்த வருடம் ஆரம்பத்தில் அஷ்ஷெய்க் முனீர் முலாபர் (நளீமி), ஜலீல் முஹம்மத், ஷிபான் ரபாய்தீன் ஆகிய இலங்கை வளவாளர்கள் மூன்று பேர் பஹ்ரைன் சென்று தெளிவூட்டல் பயிற்சியையும், இஸ்லாமிய வரையறைகளையும் கற்றனர்.


2017 மார்ச் 26 ஆம் திகதி முதன்முதலில் பாரிய சவால்களுடன், மஸ்ஜித் நிர்வாக சபைகளுடன் போராட்டங்களின் பின்னே வெற்றிகரமான நிகழ்ச்சியை CIS நடாத்தியிருந்தது. இருந்தாலும் இதுவரை தேசிய அளவில் ஏனைய மஸ்ஜித்களில் இந்நிகழ்ச்சியைத் தொடர நிர்வாக சபைகள் புரிந்து செயல்படுமா என்பதில் சவால் இருப்பதாகவும் அறிய முடிகின்றது. கொழும்பு அக்பர் மஸ்ஜித் நிர்வாகம் மட்டுமே இதுவரை தமக்கு ஆதரவு தருவதாக ஏற்பாட்டுக்குழு கூறுகின்றது.


கொழும்பு, ஸ்லேவ் ஐலண்டிலுள்ள அக்பர் மஸ்ஜித் இல் இம்மாதம் 10  ஆம் திகதி இரண்டாவது முறையாக இடம்பெற்ற நிகழ்வுக்கு வருகைதர சில சகோதர இனத்தவர் சிரமப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள அனைவருக்கும் வசதியான ஒரு மஸ்ஜிதில் இந்நிகழ்வை அடுத்தமுறை ஏற்பாடு செய்ய முடியுமாக இருந்தால் நல்லது.


லண்டனில் இந்த “Open Mosque Tour” பிரபலம் என்பதாக அறிய முடிகின்றது. அதாவது, பெருநாள் தினத்தில் பள்ளிவாயல் அனைவருக்குமாக திறந்திருக்கும். சூழலில் இஸ்லாமிய கலாச்சாரத்தை பிரதிநிதிப்படுத்தும் கடைகள் வரிசை கட்டுமாம். உணவுகளும் பல விதங்களிலும் பகிரப்படும். சிறுவர் விளையாட்டு மையங்களும் அதில் இருக்கும். மருதாணி போட்டு விடும் கடைகள், இஸ்லாமிய எழுத்துக்களில் பெயர் எழுதிக்கொடுக்கும் கடைகள், Key Tags என அது ஒரு தனி ரகம்.


கொழும்பில் ஏற்பாடான இந்த நிகழ்வில் சிற்றுண்டியும், புத்தகப் பொதியும், அரபு மொழியில் பெயர்களை எழுதிக்கொடுக்கும் முயற்சியும் சிறப்பாக இருந்தது. தமது கேள்விகளுக்கான தெளிவுகள் கிடைத்ததையிட்டு பிரகாசமான முகங்களை அங்கு காணக்கிடைத்தது.


www.visitmymosque.lk இல் இந்நிகழ்வு குறித்த விபரங்களும், படங்களும் கிடைக்கின்றன. 0766633629, 0774835972 ஆகிய இலக்கங்களைத் தொடர்புகொண்டும் ஏற்பாட்டாளர்களை அணுக முடியும்!


“முஸ்லிம் பள்ளிவாயலுக்குள், சகோதர இனத்தவரை அனுமதிப்பதா? அஸ்தஹ்பிருல்லாஹ்” என்பதாக நேற்றுவரை நீங்கள் புருவம் உயர்த்திருக்கலாம். ஆனால், பர்மா நிலவரங்கள் ஒரு சமூகம் தனித்து இருப்பதன் அபாயத்தை முழு உலகுக்கும் உணர்த்திய இத்தருணத்திலும், “அஸ்தஹ்பிருல்லாஹ் சொல்லி முடிப்பதா? மாஷா அல்லாஹ் சொல்லி இத்திட்டத்தை வரவேற்பதா?” என்பது உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.


ஐக்கிய நாடுகள் சபையின் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள் “SDGs – Sustainable Development Goals” குறித்து முழு உலகும் இப்போது பேசும் நிலையில், வெளிப்படைத்தன்மை (Transparency) என்பது நிகழ்கால சவால்களை முறியடிக்க பெரிதும் உதவும். பள்ளிவாயலுக்குள் என்ன நடக்கின்றது என்பதை உரத்துச் சொல்வோம், அதுதான் எமது கடமையும்.

யும்.
No automatic alt text available.
Image may contain: 3 people, people smiling, people standing
Image may contain: 2 people, people smiling, people sitting
Image may contain: 3 people, people standing, beard and indoor
Image may contain: 1 person, smiling
Image may contain: 2 people, people smiling, outdoor
Image may contain: 3 people
Image may contain: 2 people, people standing, people sitting and outdoor
Image may contain: 6 people, people standing and indoor
Image may contain: 3 people, people standing
Image may contain: drink and food
Image may contain: 4 people, people standing
Image may contain: 3 people, people standing
Image may contain: 5 people, people smiling, people standing
Image may contain: 1 person, standing and child
இன்று (20/09) கண்டி மீரா மக்காம் பள்ளிவாயலில் “Open Mosque Day” இடம்பெறுகின்றது.
No automatic alt text available.

சர்வ மதங்களுக்குமாக திறந்தது பள்ளிவாயல் கதவு! சர்வ மதங்களுக்குமாக திறந்தது பள்ளிவாயல் கதவு! Reviewed by Madawala News on 9/20/2017 06:19:00 PM Rating: 5