Kidny

Kidny

முஸ்லிம் சமூகத்தை மடையர்களாக நினைக்கிற அரசியல்வாதிகள்தான், இன்று சமூகத்தை வழிநடாத்த நினைக்கிறார்கள்..


முஸ்லிம் அரசியல் தலைபோகும் நிலையில் இருக்கின்றபோது, முஸ்லிம் சமூகத்தை மடையர்களாக நினைக்கிற அரசியல்வாதிகள்தான், இன்று சமூகத்தை வழிநடாத்த நினைக்கிறார்கள். தங்களுடைய ஒரு வருட கால பதவி நீடிகப்புக்காக, கடந்த பல வருடங்களாக முஸ்லிம் சமூகம் இரத்தம் சிந்தி, உயிரிழப்புக்களை எதிர்கொண்டு, அகதிகளாக்கப்பட்டு, சொந்த பிரதேசங்களை விட்டு விரட்டியக்கப்பட்டு, கடத்தப்பட்டு, கொலை செய்யப்படடு, மிக மோசமாக இனச்சுத்திகரிப்புக்கு உட்பட்ட நிலையில், அதற்கு எதிராக முன்வந்த அரசியல்வாதிகள், செயற்பட்டாளர்கள் ஒரு மாகாண சபையின் ஒரு வருட நீடிப்பு தமக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதற்காக, மாகாண அதிகாரங்களை மத்திய அரசுக்கு தாiரை வார்க்கிறார்கள் என்றால் இவர்களின் நோக்கம் என்ன? இதற்கான அவர்கள் முன்வைக்கும் விளக்கங்களை முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.

இன்று (15) காத்தான்குடியிலுள்ள கட்சியின் மக்கள் அரங்கில் நடைபெற்ற பொது மக்களுக்கான கூட்டத்தின்போதே பிர்தௌஸ் நளீமி இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர், இந்த நாட்டின் அரசியல் அதிகாரங்கள் பொய்யுரைக்கும்போது, அதனை எதிர்த்துப் பேச முடியாத, திராணியற்ற முஸ்லிம் அரசியல்வாதிகளே உள்ளனர். பிரதமர் பொய்யுரைக்கும்போது, வாய்மூடி மௌனிகளாகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளனர். இந்த முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகள் குறித்து முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அபிவிருத்தி மாயைகளுக்காக கொள்கைகளை அடகு வைத்துச் செயற்படாத ஒரு கட்சியாகும். நாம் கடந்த 11 வருடங்களாக மிகவும் தூய்மையாக உழைத்து, இந்த நிலைக்கு வந்திருக்கின்றோம். இந்த அரசியல் பயணம், எந்தவொரு அரசியல் கட்சியிடமும் சோரம்போகவில்லை. யாரிடமும் முஸ்லிம் சமூகத்தையோ, நாட்டு நலனையோ அடகு வைத்து அரசியல் செய்யும் நிலைக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இடமளிக்காது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக செய்படும் ஆளுமைபொருந்திய சகோதரர்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிடம் உள்ளனர்.

எங்களுடைய சொந்தப் பணத்தில், எமது ஹலாலா முயற்சியல் சாப்பாடு போடும்போது, அது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. இது எமது பணம். நாம் யாரிடமும் கை நீட்டி, பின்கதவால் பெற்று செலவழிப்பது கிடையாது. எமக்கொரு காரியாலம் உள்ளது. அங்கே வந்த, இந்தப் பணம் எப்படி வந்தது? யாருடயது? என்று கேட்க முடியும்.

நம் சகோதரர்கள் தருகின்ற பணத்தினால்தான் கடந்த 11 வருடமாக அரசியல் செய்கிறோம். யாரிடமும் கை நீட்டி, சமூகத்தை அடகு வைத்து, குறுக்கு வழியால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சம்பாதிக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் எங்களுடைய உயிர் உள்ள வரையில், அர்த்தமுள்ள நல்லாட்சியi உருவாக்குவதற்காக, யாரிடமும் சோரம்போகாது, மக்கள் எதிர்ப்hர்ப்பது போன்று நாம் செயற்படுவோம். எந்த அதிகார சக்திகளிடமும் நாம் சோரம் போக மாட்டோம்.  என்று தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்தை மடையர்களாக நினைக்கிற அரசியல்வாதிகள்தான், இன்று சமூகத்தை வழிநடாத்த நினைக்கிறார்கள்.. முஸ்லிம் சமூகத்தை மடையர்களாக நினைக்கிற அரசியல்வாதிகள்தான், இன்று சமூகத்தை வழிநடாத்த நினைக்கிறார்கள்.. Reviewed by Madawala News on 9/15/2017 11:30:00 PM Rating: 5