tg travels

இலங்கை அணியின் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியின் விபரம் வெளியானது.


ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை இம்மாத இறுதியில் எதிர்கொள் ளும் இலங்கை அணிதனது முதலா வது பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.


இந்த டெஸ்ட் தொடர் செப் டெம்பர் 28ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 10 ஆம் திகதி முடிவ டையவுள்ளது. இதில் ஒரு போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.

இதன்போது இலங்கை அணி அபூதாபி, டுபாய் மற்றும் ஷார்ஜா வில் ஐந்து ஒருநாள் சர்வதேச போட் டிகள், இரு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதில் பாதுகாப்பு நிலைமை உறுதி செய்யப் படும் பட்சத்தில் மூன்றாவது டி20 போட்டி ஒன்று லாஹூரில் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

"சரியான போட்டி விபரம் விரைவில் வெளியிடப்படும்" என்று குறிப்பிட்ட அதிகாரிகள், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடை பெறும் ஒரு டெஸ்ட் போட்டி இளஞ்சிவப்பு பந்தை கொண்ட பகலிரவு டெஸ்டாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக எட்டு ஆண்டுகளுக்கு முன் தாக்குதல் நடத்தப்பட்ட பகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்த அறிவிப்பை இலங்கை கிரிக் கெட் சபை கடந்த மாதம் வெளியிட்டது.

பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினையால் சர்வதேச போட்டி கள் தடைப்பட்டிருக்கும் நிலையில் இந்த சுற்றுப்பயணம் மீண்டும் அங்கு போட்டிகளை ஆரம்பிப்பதாக இருக்கும்.

இதில் மூன்று டி20 போட்டிகளையும் பாகிஸ்தானில் நடத்துவது குறித்து இலங்கை கிரிக் கெட் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தது.

இதில் ஒரு ஆட்டம் 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி மீது தாக்கு தல் இடம்பெற்ற லாஹூர் நகரிலும் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் போட்டி குறித்த பாதுகாப்பு உறுதி செய்யப்படு வதை பொறுத்து லாஹூரில் ஒரே ஒரு ஆட்டம் மாத்திரம் பாகிஸ்தானில் நடைபெறும் என்று அதிகாரி கள் கூறியுள்ளனர்.

2009 தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து முன்னணி கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. லாஹூர் அரங் குக்கு பயணித்துக் கொண்டிருந்த இலங்கை அணியினரின் பஸ்வண்டி மீதே துப்பாக்கிதாரிகள் தாக் குதல் நடத்தினர். இதில் ஏழு வீரர்கள் காயமடைந்தனர்.

2009 தொடக்கம் ஒரே ஒரு சர்வ தேச அணியாக சிம்பாப்வே மாத்தி ரமே பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சிம்பாப்வே அணி லாஹூரில் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியது.

பாகிஸ்தான் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச போட் டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தி லேயே விளையாடி வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை சொந்த நாட்டில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது சாதகமான சூழலை ஏற் படுத்தியுள்ளது. இந்த தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே இடம்பெற்றன.

கொழும்பில் அண்மையில் இடம் பெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய திலங்க சுமதிபால, பாகிஸ்தான் தனிமைப் படுத்தப்படுவது முடிவுக்கு கொண் டுவரப்பட வேண்டும் என்றும் நாடுகள் அங்கு சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

இலங்கை அணியின் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியின் விபரம் வெளியானது. இலங்கை அணியின் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியின் விபரம் வெளியானது. Reviewed by Madawala News on 9/06/2017 11:23:00 AM Rating: 5