Kidny

Kidny

கவிஞர் கிராமத்தான் கலீபாவின் 'நோக்காடு' கவிதை நூல் அறிமுக நிகழ்வு கொழும்பில்...



ஊடகவியலாளரும் கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் நோக்காடு கவிதை நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

பொத்துவிலைச் சேர்ந்த ஊடகவியலாளரும் கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் இரண்டாவது கவிதை நூலான நோக்காடு அறிமுக நிகழ்வு எதிர்வரும் 2017/09/10ம் திகதி ஞாயிறு பி.ப. 5:00மணிக்கு மருதானை தெமடகொட வீதியிலுள்ள வை.எம்.எம்.ஏ கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது.

தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அஸீஸ் மன்றத் தலைவர் அஷ்ரப் அஸீஸ் கலந்துகொள்வதுடன் கௌரவ அதிதியாக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சகோதரர் ஏ.எம்.அப்துல் மஜீத் கலந்துகொள்கிறார்.

நூல் அறிமுகத்தை ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சாமிளா முஸ்டீனும் நூலுரையை ஊடகவியலாளரும் கவிஞருமான நாச்சியாதீவு பர்வீன் 'நோக்காடு ஒரு நோக்கு' உரையை பன்னூலாசிரியர் அஷ்ரப் சிஹாப்தீன் 'கிராமத்தின் இலக்கிய முயற்சியும் கிராமத்தான் கலீபாவும்' உரையை வசந்தம் புகழ் முஷர்ரப் கவிவாழ்த்து கலாபூசணம் என்.நஜ்முல் ஹுசைனோடு எங்கள் தேசம் லரீப் சுலைமான் மற்றும் மணிப்புலவரின் உரைகளும் இடம்பெறவுள்ளன.

நூலின் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்கிறார். சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலி தொகுத்து வழங்கும் நோக்காடு நூல் வெளியீட்டுவிழா அன்மையில் பொத்துவிலில் இடம்பெற்றது குறிப்பிடத் தக்கது
கவிஞர் கிராமத்தான் கலீபாவின் 'நோக்காடு' கவிதை நூல் அறிமுக நிகழ்வு கொழும்பில்... கவிஞர் கிராமத்தான் கலீபாவின் 'நோக்காடு' கவிதை நூல் அறிமுக  நிகழ்வு கொழும்பில்... Reviewed by Madawala News on 9/07/2017 05:23:00 PM Rating: 5