tg travels

நேற்று முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக புனித ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் போது தேரர்கள் அடாவடி செய்தது வேதனை தருகிறது.


இறக்காமம் மாயக்கல்லி மலையடி வாரத்தில் விகாரையொன்றினை அமைக்கும் முயற்சியின் போது ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகள் அமைச்சர் சாகல ரட்நாயக்கவின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம்  தெரிவித்தார்.

குறித்த விவகாரம் தொடர்பாக உரிய தரப்பினரோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி தக்க நடவடிக்கைகளை எடுப்ப தாக அமைச்சர் சாகல ரட்நாயக்க தன் னிடம் கூறியதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ரவூப் ஹக்கீம்  மேலும் தெரிவித்ததாவது,

ஹஜ்ஜூப் பெருநாள் தினமான நேற்று இறக்காமம், மாயக்கல்லி மலை யடிவாரத்தில் அம்பாறை பிரிவெனா விகாரையைச் சேர்ந்த அம்பேபிட்டிய சியலரத்ன தேரர் தலைமையில் விகாரையொன்றினை அமைக்கும் முயற் சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு தேரர்களுக்கும் பொதுமக்களுக் குமிடையில் முறுகல் நிலை ஏற்பட் டது. எனினும் அங்கு விரைந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸிர் மற்றும் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ஆகியோரின் தலையீட்டில் இந்த முயற்சி நிறுத்தப்பட்டது.


முஸ்லிம் மக்கள் மகிழ்ச்சியாக புனித ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் போது இவ்வாறு தேரர்கள் நடந்துகொள்வது வேதனை யளிக்கின்றது.

நேற்றைய தினத்தில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடு வதை விடுத்து மாயக்கல்லி மலையடி வாரத்தில் ஒன்று கூடிவிட்டனர்.


இவ்வாறு விகாரை அமைப்பதற்கு நீதிமன்றத்தில் தடைவிதித்துள்ளது.

மேலும், இந்த மாயக்கல்லி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு தனியாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல. விகாரை யொன்று அமைக்கவேண்டுமென்றால் அதை அவர்கள் சட்டரீதியாக முன்னெ டுத்திருக்கவேண்டும்.

 அதை விடுத்து அடாவடித்தனமாக செயற்பட்டிருக் கக்கூடாது. இது தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகள் அமைச்சர் சாகல ரட்நாயக்கவின் கவனத்திற்கு கொண்டுசென்றேன். இந்தப்பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தக்க தீர்வினை பெற்றுத்தருவதாக அவர் என்னிடம் கூறினார் என்றார்.
நேற்று முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக புனித ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் போது தேரர்கள் அடாவடி செய்தது வேதனை தருகிறது. நேற்று முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக புனித ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் போது தேரர்கள் அடாவடி செய்தது வேதனை தருகிறது. Reviewed by Madawala News on 9/03/2017 11:35:00 AM Rating: 5