Ad Space Available here

சமூக விரோத செயல்களுக்கான மத்திய நிலையமாக மாறிவிட்டதா இரத்தினபுரி மாநகர சிறுவர் பூங்கா?

 
எம்.எல்.எஸ்.முஹம்மத்  (இரத்தினபுரி)

"சிறுவர்களைப் பாதுகாப்போம்.அவர்களின் உரிமைகளை மதிப்போம்"என்ற சிந்தனையையும் இலக்காக் கொண்டு செயற்பட்டு வரும் இந்நல்லாட்ச்சி அரசில்  மிக நீண்ட காலமாக சிறுவர்களின் நலனும்   உரிமையும் மறுக்கப்பட்டு வரும் ஓர் மோசமான நிகழ்வு இரத்தினபுரி மாநகரில் பதிவாகியுள்ளது.

இரத்தினபுரி நகரைச் சேர்ந்த சிறுவர்களினதும் மற்றும் இரத்தினபுரி நகருக்கு நாளந்தம் வந்து செல்லும்   சிறுவர்களினதும்  மனநிலை அபிவிருத்தி மற்றும்   உடல்  ஆரோக்கியத்தையும்  மேம்படுத்துவதனை  நோக்காக் கருதி கடந்த 2009.09.22 ஆம் திகதி  சபரகமுவ மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள்,அதிகாரிகள் முன்னிலையில் தற்போதைய சபரகமுவ மாகாண அபிவிருத்தி அமைச்சர் WDJ.செனவிரத்ன அவர்களால் இரத்தினபுரி சிறுவர்களுக்கு  திறந்துகொடுக்கப்பட்ட இரத்தினபுரி மாநகர சிறுவர் பூங்கா இன்று இரத்தினபுரி மாநகர சபையால் கைவிடப்பட்ட 8அடி உயரத்திற்கு மேல் அர்ந்த புற்கள் வளந்த ஓர் பயங்கரமான இடமாகவும் இரத்தினபுரி நகரில் இடம்பெற்று வரும் பல சமூக விரோத  தீய செயல்களுக்கான ஒர் முக்கிய மத்திய நிலையமாகவும் இது மாறியுள்ளது.

அன்று சபரகமுவ மாகாண சபையில் கிராமிய அபிவிருத்தி மற்றும் பொது வசதிகள் அமைச்சராக இருந்த தற்போதைய இரத்தினபுரி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் ஜானக  வக்கும்பர அவர்களினால் 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின்  மூலம் அமைக்கப்பட்ட இச்சிறுவர் பூங்கா இன்று சிறுவர்கள் செல்லத்தகாத  துஷ்பிரயோகங்கள்,பாலியல் தொழிகள்  இடம்பெறும்  மற்றும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை செய்யும் ஓர் முக்கிய இடமாகவும் இச்சிறுவர் பூங்கா மாறியுள்ளது.

எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாத இவ்விடத்தில்  இரத்தினபுரி நகருக்கு வந்து செல்வோர் மூலம் இலவசமாக கொடுக்கப்படும் உணவுப் பொதிகளுக்காகவும் மற்றும் சில தனிப்பட்ட நலன்களுக்காகவும் இரத்தினபுரி நகரில் யாசகம் கேட்டுத் திரியும் குடும்பங்கள் பாடசாலை செல்ல வேண்டிய வயதுடைய தமது குழந்தைளுடன் இங்கு தான் நாட்களை நகர்த்தி வருகின்றனர் .

இச்சிறியவர்களை இலக்காக் கொண்டு இரத்தினபுரியில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப் பட்ட பலரும் இவ்விடம் வந்து செல்கின்றமையும் அனைவராலும் அவதானிக்க முடிகிறது .இதேபோல்
இங்கிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இரத்தினபுரி சிறுவர்களின் உரிமைகள் மறுக்கப் பட்டு சமூக விரோதிகளின் வாசஸ்தளமாக மாறி வரும் இரத்தினபுரி மாநகரத்தின் சிறுவர் பூங்காவை மீளத் திருத்தி சிறுவர்களிடம் கையளிக்குமாறு இரத்தினபுரி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

இது தொடர்பாக இரத்தினபுரி மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான சம்மேளனத்தின்  தலைவர்  ஷமின்த பியசேகர  கருத்து தெரிவிக்கையில்

இரத்தினபுரி மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த சிறுவர் பூங்கா தொடர்பான பிரச்சினையை நாம் பல தடவைகள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு  கொண்டு வந்தோம்.ஆனால் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை.மாறாக இதனால் இரத்தினபுரி மாநகரில் சமூக விரோதமான செயல்கள்தான்  அதிகரித்துக்கொண்டு செல்வது மாத்திரம் தான் இடம்பெறுகிறது.சிறுவர்களின் நலன்கள் தொடர்பாக  அவதானம் செலுத்துவதற்கு  அனைவரும்  பின்வாங்கி  வருகின்றனர்.இது உண்மையில் பெரியவர்கள் எமது எதிர்கால தலைமுறையினருக்கு செய்யும் மாபெரும் தவறாகும்.மிக அவசரமாக இரத்தினபுரி மாநகர சபை இந்த சிறுவர் பூங்காவை  மீள திருத்தியமைப்பது தொடர்பாக மிகக் கூடிய அவதானம்  செலுத்துமாறு  வேண்டுகிறேன்.அத்துடன் இதன் முகாமைத்துப்  பணிகளை முன்னெடுப்பதற்கு ஒர் தகுதியான குழுவை நியமிக்குமாறும் வேண்டிக் கொள்கிறேன்  எனவும்  அவர் குறிப்பிட்டார் .

இரத்தினபுரி நகர் ஊடாக செல்லும் களு கங்கையை மிக அண்மித்து  அதன்  ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள  இச்சிறுவர் பூங்கா எந்த நியமங்களில் அடிப்படையில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது  என்பது  தொடர்பில்  அவதானம் செலுத்த வேண்டியது சிறுவர் விவகார அமைச்சின் முக்கிய பொறுப்பாகும்.
சமூக விரோத செயல்களுக்கான மத்திய நிலையமாக மாறிவிட்டதா இரத்தினபுரி மாநகர சிறுவர் பூங்கா? சமூக விரோத செயல்களுக்கான மத்திய நிலையமாக மாறிவிட்டதா  இரத்தினபுரி மாநகர சிறுவர் பூங்கா? Reviewed by Madawala News on 9/05/2017 11:41:00 PM Rating: 5