Kidny

Kidny

உள்ளக மாற்றத்திற்கான மனிதநேயச் சுற்றுலா செல்வோம்..


கல்விச் சுற்றுலா மாணவர்களின் பாடப்புத்தகம்,வெளிக்களச் செயற்பாடுகளோடு தொடர்பானது.அவ்வாறான சுற்றுலாக்கள் சிலபோது ஆடல்,பாடல்களுடன் நிறைவு பெறலாம்/பெருவதுமுண்டு. (பயன்கள் இல்லை என்று கூறுவதை விட உள்ளத்தில் தாக்கம் ஏறட்படுத்துவதில் ஏதோ ஒரு குறையை உணர்கிறேன்).

நான் இங்கு குறிப்பிட விரும்புவது வித்தியாசமாக திட்டமிடப்பட வேண்டும் என்பதையே. அது கற்பவர்களின் வாழ்விலும் உணர்விலும் மனப்பாங்குகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.

உதாரணமாக அழைத்துச் செல்லப் படவேண்டிய இடங்களில் சில ...
1- சிறுவர் இல்லங்கள்.
2- புற்று நோய் வைத்தியசாலை.
3- முதியோர் இல்லங்கள்.
4- அங்கவீனர்கள் இல்லம்.
5- மன நிலை பாதிக்கப்பட்டவர்களை பறாமறிக்கும் இடங்கள்.
6- சிறுவர் சீர்திருத்தப் பள்ளி.

இது ஒரு முன்மொழிவு.. வழிகாட்டுபவர்கள் ஆசிரியர்கள் செல்லும்மிடத்திற்குத் தேவையான பொருத்மான திட்டமிடல்களுடனும் பொருட்களுடனும் செல்வது சாலச் சிறந்தது.

A Raheem Akbar
1439.01.01(2017/09/22)
உள்ளக மாற்றத்திற்கான மனிதநேயச் சுற்றுலா செல்வோம்.. உள்ளக மாற்றத்திற்கான மனிதநேயச் சுற்றுலா செல்வோம்.. Reviewed by Madawala News on 9/23/2017 01:48:00 PM Rating: 5