Kidny

Kidny

பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி, அனாதரவான நிலையில் கண்டி புகையிரதநிலையத்தில் மீட்பு.


பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப் பட்ட சிறுமி ஒருவர் கைவிடப்பட்ட நிலையில்  கண்டிப்பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 கண்டி புகையிரதநிலையத்தில் இரவு வேளையில் சந்தேகத்திற்டெமான முறையில் நடமாடிய சிறுமியை முதியவர் ஒருவர் விசாரித்த போது தனக்கு யாரும் இல்லையென சிறுமி தெரிவித்ததையடுத்து கண்டி பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 போலீசார் மேற்கொண்ட விசாரணைகளின் மேற்படி சிறுமி பின்வருமாறு தெரிவித்தார்.தான் காலி பத்தேகம மில்லகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் வயது 13 என்றும் தெரிவித்துள்ளார். தான் ஞாயிற்றும் கிழமை தனியார் வகுப்பிற்குச் செல்வதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டு வந்ததாகவும் தனது தாய் 500 ரூபா பணம் கொடுத்ததாகவும் அதனை எடுத்துக்கொண்டு நடந்துவரும்வழி யில் முச்சக்கரவண்டி ஒன்று வந்ததாகவும் அதன் பின் ஆசனத்தில் இரு இளைஞர்கள் இருந்ததாகவும் அவர்கள் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும் அவர்கள் இருவரும் சேர்ந்து பலவந்தமாக ஆட்டோவில் ஏற்றியதாகவும் தனது கையையும் முகத்தையும் கறுப்புத் துணியால் கட்டியதாகவும் அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் கூறியுள்ளார்.


தான் சத்தமிட்டதாவும் யாரும் உதவிக்கு வரவில்லை என்றும் பின்னர்தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் மாலையில் புகையிரத நிலையம் ஒன்றில் விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந் நிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்தில் ஏறி இடம் தெரியாது கண்டிவரை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


பொலிலார் மேற்படி சிறுமியை நீதவான் முன்ஆஇர்செய்து நீதவான் உத்தரவில் வைத் திய அறிக்கை பெற நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். கண்டிபொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி, அனாதரவான நிலையில் கண்டி புகையிரதநிலையத்தில் மீட்பு. பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி, அனாதரவான நிலையில் கண்டி  புகையிரதநிலையத்தில் மீட்பு. Reviewed by Madawala News on 9/06/2017 03:16:00 PM Rating: 5