Ad Space avaiable

அக்குறணைப் பிரதேசத்தில் மக்கள் ஒன்றிணைந்து செய்த பாரிய ஆர்பாட்டம். (படங்கள்)


-ஜே.எம்.ஹபீஸ்-

அக்குறணைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பங்கொள்ளாமட நெடிசிரிகம பிரதேசத்தில் இயங்கி வந்த கற்குழியை மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதை அடுத்து பிரதேசமக்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்பாட்டம் ஒன்றை முன் எடுத்தனர்.(26.9.2017)
சுற்றாடல் அதிகார சபை, புவிச்சரிதவியல் அகழ்வாராச்சி திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகள் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும் தகவல்களையும் சேகரிப்பதற்காகவும் அங்கு வந்திருந்தனர்.

அதன் போது இது தொடர்பாக பொது மக்கள் பின்வருமாறு தெரிவித்தனர்.
கடந்த 2012ம் ஆண்டுமுதல் மேற்படி கற்குழி ஆரம்பிக்கப்பட்டதாகவவும் அதன் பின் இப்பிரதேசத்திலுள்ள 50ற்ம் மேற்பட்ட வீடுகள் அதிர்வு காரணமான வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அடிக்கடி அதிர்வுகள் ஏற்படுவதால் சிறுவர்கள் பீதியுடன் வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.
அதேநேரம் கள் அறைக்கும் யந்திரம் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளதால் சுற்றாடலில் வளி மாசடைந்து அநேகர் சுவாசப்பை நோய்களினால் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தளர்.

இதனை விட குருகொடை மற்றும் பங்கொள்ளாமட பிரதேசத்திஶ்ரலுள்ள நூற்றுக் கணக்கான வீடுகளுக்கு இவ்விடத்திலிருந்தே குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் நடந்ததாகவும் மேற்படி கற்குழி ஆரம்பிக்கப்பட்தன் விளைவாக நீர் வற்றி கிணறுகள் தூர்ந்து போயுள்ளதாகக்வும் குறிப்பிட்டனர்.

கராம்பு, சாதிக்கா, கொக்கோ, கோப்பி போன்ற பல்வேறு பயிர்கள் ஆரம்பத்தில் பயிரிடப்பட்ட போதும் தற்போது போதியளவு நீர் இல்லாத காரணத்தால் தமது ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
எனவே ஏற்கனவே காலவதியாகியுள்ள கள் உடைக்கும் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கக் கூடாது எனக் கோஷம் எழுப்பினர்.


அக்குறணைப் பிரதேசத்தில் மக்கள் ஒன்றிணைந்து செய்த பாரிய ஆர்பாட்டம். (படங்கள்) அக்குறணைப் பிரதேசத்தில் மக்கள் ஒன்றிணைந்து செய்த  பாரிய ஆர்பாட்டம். (படங்கள்) Reviewed by Madawala News on 9/27/2017 06:49:00 AM Rating: 5