Kidny

Kidny

அண்ண !


Mohamed Nizous

இன்னுமொரு சாதியினை
இழிவாகப் பேசிவிட்டால்
அண்ண பெரியாளு

அவருக்கும் ஒரு கூட்டம்

தூசனம் பெரிதாக
பேச முடியுமென்றால்
ஆசாமிதான் நாட்டில்
தேசிய வீரன்

நைனாவோடு நாதாரி
நாலு பேர் நின்றால்
ஐ.நா.வையும் எதிர்ப்பார்
ஆண்டவனையும் எதிர்ப்பார்

தலை இல்லா ஆளெல்லாம்
தலைவனாக ஆகுவதால்
நிலை குலைந்து போயிருக்கு
நீதியும் சட்டமும்

குடித்துவிட்டுக் கத்துகிற
கோமாளி முன்னால
படித்த அதிகாரிகளும்
பல்லக் காட்டி நிற்கிறார்கள்

கூட்டுக்குள் போட்டு
கும்மியடிக்க வேண்டியதை
நாட்டில சும்மா விட
பாட்டில குரைக்கிறது

கீர்த்திகள் பல பெற்ற
பூர்த்தியான இந் நாட்டை
பார்த்துச் சர்வதேசம்
தூற்றுது இவன்களாலே

ஆட்சியிலே உள்ளவர்கள்
பூச்சாண்டி காட்டும் இந்த
பூச்சிகளை நசுக்காவிடின்
போச்சு நம் நாடு.
அண்ண ! அண்ண ! Reviewed by Madawala News on 9/30/2017 11:35:00 AM Rating: 5