Kidny

Kidny

விசேட அதிரடிப்படையினரிடம் இருந்து தப்ப முடியாமல் வாகனத்தை மோதி கவிழ்த்துவிட்டு தப்பியோடிய கும்பல். (படங்கள்)


வவுனியாவில் மரக்குற்றிகளைக் கடத்திச் சென்ற வாகனமொன்றை விசேட அதிரடிப்படையினரும், வன இலாகா அதிகாரிகளும் விரட்டிச் சென்ற நிலையில் இன்று அதிகாலை குறித்த வாகனம் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஓமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் இருந்து பெறுமதியான மரக்குற்றிகளை ஏற்றிய வாகனமொன்று வவுனியாவை நோக்கி பயணித்துள்ளது.

இந்த நிலையில், பெரியமடு பகுதி விசேட அதிரடிப்படையினரும், வன இலாகா அதிகாரிகளும் குறித்த வாகனத்தை மறித்து சோதனையிட முற்பட்டுள்ளனர்.

எனினும் வாகனத்தை நிறுத்தாது தப்பிச் செல்ல முயற்சித்துள்ள நிலையில் விசேட அதிரடிப்படையினரும், ஓமந்தை வன இலாகா அதிகாரிகளும் குறித்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில், வவுனியா, பேயாடிகூழாங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்டபோது தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது சாரதியும், அதில் பயணித்தவர்களும் தப்பியோடியுள்ளதுடன், வாகனமும் அதில் இருந்த பெறுமதியான மரக்குற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


விசேட அதிரடிப்படையினரிடம் இருந்து தப்ப முடியாமல் வாகனத்தை மோதி கவிழ்த்துவிட்டு தப்பியோடிய கும்பல். (படங்கள்) விசேட அதிரடிப்படையினரிடம் இருந்து தப்ப முடியாமல் வாகனத்தை மோதி கவிழ்த்துவிட்டு தப்பியோடிய கும்பல். (படங்கள்) Reviewed by Madawala News on 9/20/2017 11:16:00 AM Rating: 5