Kidny

Kidny

ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு. (படங்கள்)


ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரநடுகை நிகழ்வும் வாகனப் பேரணியும்  வெகு விமர்சையாக நடைபெற்றது.


கல்லூரி வளாகத்தில் தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடியேற்றப்பட்ட நிகழ்வினை தொடர்ந்து கல்லூரியில் முதலாவது மரக்கன்று நடப்பட்டது.


இதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா ஏற்பாட்டுக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததற்கமைய கல்லூரியின் band வாத்தியக்குழு முன்னாள் செல்ல வாகனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.


குறித்த வாகனப் பேரணியில் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கு கொண்டிருந்தனர்.
கல்லூரியில் மரம் நடப்பட்டதை தொடர்ந்து குறித்த வாகன பேரணி ஹெம்மாதகம கபுரக்க விகாரை நோக்கி சென்றதுடன் அங்கு விகாரதிபதியினாலும் கல்லூரி பிரமுகர்களாலும் மரம் நடப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் உரையாற்றிய விகாராதிபதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செட்டப்பட்ட இந்த நிகழ்வை பாராட்டியதோடு நன்றிகளையும் தெரிவித்தார்.


தொடர்ந்து ஹெம்மாதகம நகரகிரி வித்தியாலயம், ஹெம்மாதகம போதனா வைத்தியசாலை, ஹெம்மாதகம பொலிஸ் நிலையம், ஹெம்மாதகம பெரிய பள்ளிவாயல் ஆகிய  முக்கிய இடங்களில் மரங்கள் நடப்பட்டன.
மிகச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கோட்ட கல்வி அதிகாரி திரு.விஜயரத்ன பண்டா, தமிழ் மொழி பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் ஏ.எஸ்.நஜீப், கல்லூரி அதிபர் கே.எம்.பஹ்மி,கேகாலை மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் லத்தீப் பாரூக், இலங்கை கஜூ கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார, கஜூ கூட்டுத்தாபனத்தின் உப தலைவர் மிரிஹெல்ல,

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதித்தலைவர் மௌலவி தாஸீம், ஹெம்மாதகம பள்ளிவாயல்கள் ஒன்றியத்தின் தலைவர் அல்.ஹாஜ் யூசுப்,கல்லூரியின் முன்னாள் அதிபர்களான அல்-ஹாஜ் நயீமுதீன், அல்-ஹாஜ் நிஸ்தார்,  மரநடுகை நிகழ்வின் பிரதான ஏற்பாட்டாளர் அல்-ஹாஜ் ஹில்மி, மாவனல்லை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லியாவுடீன், பிரதேச சபை உறுப்பினர் ரீசா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


இதேவேளை ஹெம்மாதகமையில் மட்டுமல்லாது கல்லூரியின் பழைய மாணவர்கள் வாழும் உலகின் பல நாடுகளிலும் அவர்கள் வசிக்கும் இடங்களில் நேற்றைய தினம் மரம் நடப்பட்டமையானது சிறப்பமசமாகும்.
மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்விற்கு ஒத்துழைத்த மாணவர்கள்,ஆசிரியர்கள்,பொதுமக்க ள் பழைய மாணவர்கள் அனைவருக்கும் நூற்றாண்டு விழா ஏற்பாட்டுக்குழு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு. (படங்கள்) ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு. (படங்கள்) Reviewed by Madawala News on 9/23/2017 08:57:00 AM Rating: 5