Kidny

Kidny

தமிழ் மற்றும் பெளத்த மக்கள் வழிபாடு நடத்தி வந்த இடம் தகர்த்தெறியப்பட்டு தரைமட்ட மாக்கப்பட்டது.


மாத்தளை கவுடுபெல்லையை அடுத்துள்ள மாத்தளை பிரதேச செயலகத்துக்கு கீழ்வரும் அம்பங்கை தோட்டத்திலிருந்த சுமார் நூறு வருடங்களுக்கு மேல் பழமையான அம்மன் ஆலயமும் அதையொட்டி யிருந்த பாரிய அரச மரமொன்றும் போயா தினத்தன்று பாரவூர்தியின் உதவியுடன் முற்றுமுழுதாகத் தகர்த்தெறியப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.


இங்குள்ள தமிழ் மக்கள் மாத்திரமின்றி இப்பகுதி பெளத்த மக்களும்  வழிபாடு நடத்தி வந்த மேற்படி ஆலயத்தை ஒட்டியுள்ள பகுதியை பெளத்த பிக்கு ஒருவர் விலைக்கு வாங்கியிருப்பதாகவும் அதுமுதல் அவர்களால்
வழிபாட்டாளர்களுக்கு பல்வேறு இடர்கள் விளைவிக்கப்பட்டு வந்ததாகவும் இப்ப குதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


அண்மையில் ஆலயத்துக்கு செல்வதைத் தடுக்க முட்கம்பி வேலியும் அமைக்கப் பட்டிருந்ததாகவும் இவர்கள் குறிப்பிடு கின்றனர்.


ஆலயத்துக்குச் சேர்ந்த இரண்டு பேர்ச்சஸ் காணியை ஒதுக்கித் தருவதற்கு
நட வடிக்கை எடுக்கும்படிமாவட்ட செயலாளருக்குக் கோரிக்கை விடுத்தும் எவ் வித பலனும் கிடைக்காத நிலையி லேயே குறித்த பெளத்த பிக்குவினால் மேற்படி ஆலயம் தரைமட்ட மாக்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரி விக்கின்றனர்.
தமிழ் மற்றும் பெளத்த மக்கள் வழிபாடு நடத்தி வந்த இடம் தகர்த்தெறியப்பட்டு தரைமட்ட மாக்கப்பட்டது. தமிழ் மற்றும் பெளத்த மக்கள் வழிபாடு நடத்தி வந்த இடம் தகர்த்தெறியப்பட்டு தரைமட்ட மாக்கப்பட்டது. Reviewed by Madawala News on 9/08/2017 03:19:00 PM Rating: 5