Kidny

Kidny

பதவியேற்ற பின்பு பசில் ராஜபக்ச முதன்முறையாக யாழ் விஜயம் . (படங்கள்)

-பாறுக் ஷிஹான்-

சிறிலங்கா பொதுஜன முண்ணனி கட்சியின் தலைவர் பசில் ராஜபக்ச   கட்சியின் தலைவராக பதவியேற்ற பின்பு முதன்முறையாக யாழ் விஜயம் இன்று (30) சனிக்கிழமை மேற்கொண்டுள்ளார்.

 முதலில் ஆலய வழிபாடுகளில் ஈடுபடும் முகமாக நல்லூர் கோவிலுக்கு விஜயத்தினை  மேற்கொண்டார்.

வழிபாட்டின் பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் அரசியல் வேலைத்திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது. நல்லூர் கோயிலில் இறை வழிபாட்டுடன் எமது முதல் பணியினை ஆரம்பிக்கின்றோம். வடக்கில் தமிழ் மக்களை சந்தித்து அவர்களுடன் அரசியல் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள விரும்புகிறோம். வடக்கில் அபிவிருத்திகள் மற்றும் மாகாண சபையை மகிந்த ராஜபக்ச ஆட்சியில் உருவாக்கினோம். எனினும் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தாது இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் மக்களுக்கு ஆட்சியினை ஒப்படைக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன் என கூறினார்.

பதவியேற்ற பின்பு பசில் ராஜபக்ச முதன்முறையாக யாழ் விஜயம் . (படங்கள்) பதவியேற்ற பின்பு பசில் ராஜபக்ச முதன்முறையாக யாழ் விஜயம் . (படங்கள்) Reviewed by Madawala News on 9/30/2017 02:25:00 PM Rating: 5