Kidny

Kidny

கடுமையாக இரத்தம் வழிந்தபடி குற்றுயிருடன் வீதியில் கிடந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பு. மாடு திருடர் என சந்தேகம்.

 
பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு பின்னால் அமைந்துள்ள  பிள்ளையார் கோவில் தேர் முட்டிக்கு அருகில் குற்றுயிருடன் கடும் இரத்தம் வழிந்தபடி காயமடைந்து காணப்பட்ட நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அப்பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் திருடி வந்தவர் என கூறி இன்று(19) காலை இனந்தெரியாத சிலர் படுகாயமடைந்து காணப்பட்ட நபரை பலமாக தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதல் காரணமாக காலையில் குற்றுயிராக காயமடைந்த குறித்த நபரை வைத்தியசாலைக்கு அனுமதித்த யாழ்ப்பாண பொலிஸார் அங்கு இறந்து விட்டதாக அறிவிததனர்.

இந்நிலையில் காயமடைந்த நிலையில் இரந்த குறித்த ஆலய பூசகர் உள்ளிட்ட சிலர் விசாரணைக்காக பொலிஸார் அழைத்து சென்றுள்ளதுடன் இறந்தவர் நாவலர் வீதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையாக இரத்தம் வழிந்தபடி குற்றுயிருடன் வீதியில் கிடந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பு. மாடு திருடர் என சந்தேகம். கடுமையாக இரத்தம் வழிந்தபடி குற்றுயிருடன் வீதியில் கிடந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பு. மாடு திருடர் என சந்தேகம். Reviewed by Madawala News on 9/19/2017 05:12:00 PM Rating: 5