Kidny

Kidny

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் பெண்­களே அதி­க­மாக வெளி­நா­டு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாகச் செல்­கின்­றார்கள்..

 

வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­காகச் செல்­கின்­ற­வர்­களின் பாட­சாலைக் கல்­வி­யினைத் தொடரும் பிள்­ளை­க­ளுக்கு  கூடு­த­லான சலு­கை­களை எதிர்­கா­லத்தில் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.


வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­ய­கமும் இணைந்து ஏற்­பாடு செய்த நட­மாடும் சேவை கடந்த திங்கட்கிழமை சம்­மாந்­துறை பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


பிர­தேச செய­லாளர் எஸ்.எல். முகம்மட் ஹனீபா தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கை­யிலே – வறுமை கார­ண­மாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் பெண்­களே அதி­க­மாக வெளி­நா­டு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாகச் செல்­கின்­றார்கள். குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தில் மாத்­திரம் இவ்­வ­ருடம் 1400 பேர் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகத்தில் பதிவு செய்­துள்­ளனர். அதில் 900பேர் பெண்­க­ளாவர்.


கல்­மு­னையில் இயங்கி வந்த வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­யகத்தின்  காரி­யா­லயத்­தினை மீண்டும் திறக்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்­பட அர­சியல் தலை­வர்கள் என்­னிடம் கேட்டுக்கொண்­டார்கள் அதனை திறப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். 


வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­காக செல்­வோரில் பெருந்­தொ­கை­யானோர் வேலை­வாய்ப்புப் பணி­ய­கத்­தினால் பதிவு செய்­யாமல் செல்­கின்­றனர். இதனால் பாரிய அனு­கூ­லங்­களை வேலை­வாய்ப்பு பெற்றுச் செல்லும் மக்கள் இழந்து வரு­கின்­றனர்.


வெளி­நாட்டு வேலை­வாய்ப்­பிற்­காக பணி­யகத்தின் மூலம் பதிவு செல்­வோ­ருக்கு ஓய்­வூ­தி யம், புல­மைப்­ப­ரிசில் மற்றும் காப்­பு­றுதி போன்ற பல்­வேறு பாரிய நன்­மைகள் கிட்­டு­கின் ­றன. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வேலைத்­திட்­டத்­திற்கு அமை­வாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­களில் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை நேரில் கண்­ட­றி­வ­தற்­காக வேண்­டியே விசேட நட­மாடும் சேவை நாடு­பூ­ரா­கவும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.  


கிழக்கு மாகாண மக்கள் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்­வ­தற்­காக விரைவில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யக­மொன்­றினை திறக்­க­வுள்ளோம்.


ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் அர­சாங்­கமும் இன­வாதம் இல்­லாமல் மக்­க­ளுக்கு சிறந்த சேவை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்­துள்­ளது. அதற்கு அரச ஊழி­யர்­களின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­ன­தாகும்.


இந்­நி­கழ்வில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ. அமீர், திணைக்களங்களின் தலைவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் பெண்­களே அதி­க­மாக வெளி­நா­டு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாகச் செல்­கின்­றார்கள்.. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் பெண்­களே அதி­க­மாக வெளி­நா­டு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாகச் செல்­கின்­றார்கள்.. Reviewed by Madawala News on 9/01/2017 10:47:00 AM Rating: 5