Ad Space Available here

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த ஹிஸ்புல்லாஹ்


மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மாதிரி மீனவ கிரா­ம­மொன்றை உரு­வாக்கல், மஞ்­சந்­தொ­டு­வா­யில் மீன்­பிடி பட­கு­களை திருத்தும் நிலை­ய­மொன்றை அமைத்தல், பூநொச்­சி­மு­னையில் மீன்­பிடி திணைக்­க­ளத்தின் உப அலு­வ­ல­க­மொன்­றினை ஸ்தாபித்தல் போன்ற விட­யங்­களை ஆராய்ந்து சாத்­தி­ய­வள அறிக்கை தயார் செய்­வ­தற்­காக கடற்­றொழில் மற்றும் மீன்­பி­டித்­துறை அமைச்சின் உயர்மட்­டக்­குழு கடந்த திங்­கட்­கி­ழமை மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்­தது. 


இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

கடற்­றொழில் மற்றும் மீன்­பிடித்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர அண்­மையில் மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார். இதன்­போது, மட்­டக்­க­ளப்பில் மாதிரி மீனவ கிரா­ம­மொன்றை ஸ்தாபித்தல், மஞ்­சந்­தொ­டுவாய், பால­முனை, காங்­கே­ய­னோடை, பூநொச்­சி­முனை ஆகிய பிர­தே­சங்­களில் மீன­வர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கண்டு அவர்­க­ளது உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்தல், மஞ்­சந்­தொ­டுவாய் வாவியில் மீன்­பிடி மற்றும் ஆழ்­கடல் மீன்­பிடி பட­கு­களை திருத்­து­வ­தற்­கான நிலை­ய­மொன்றை அமைத்தல், பூநொச்­சி­மு­னையில் ஆழ்­கடல் மீன்­பிடி கப்­பல்கள், வள்­ளங்கள் பதி­வ­தற்­கான மீன்­பிடி திணைக்­க­ளத்­தி­னு­டைய உப அலு­வ­ல­கத்தை ஸ்தாபித்தல் போன்ற பல்­வேறு கோரிக்­கைகளை அமைச்சர் அம­ர­வீ­ர­விடம் புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் முன்­வைத்­தி­ருந்தார். 


பின்னர் இது சம்­பந்­த­மான இரு தரப்பு கலந்­து­ரை­யா­டலும் இடம்­பெற்­றது. அதற்­க­மைய இத்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்டு அதற்­கான மதிப்­பீட்டு அறிக்கை மற்றும் சாத்­தி­ய­வள அறிக்கை என்­பன தயார் செய்­யு­மாறு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு அமைச்சர் அம­ர­வீர பணிப்­புரை வழங்­கி­யி­ருந்தார். 


இதற்­க­மைய சாத்­தி­ய­வள அறிக்கை தயா­ரிப்­ப­தற்கு கள ஆய்­வொன்றை மேற்­கொள்­வ­தற்­காக கடற்­றொழில் மற்றும் மீன்­பி­டித்­துறை அமைச்சின் உயர் மட்­டக்­குழு கடந்த திங்­கட்­கி­ழமை மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்­தது. இதில் கடற்­றொழில் நீரியல் வளங்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் பாலித்த பெர்­னாண்டோ உள்­ளிட்ட பல முக்­கிய அதி­கா­ரிகள் இடம்­பெற்­றி­ருந்­தனர்.   


இவர்­களை வர­வேற்ற புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ், சம்­பந்­தப்­பட்ட பிர­தே­சங்­க­ளுக்கு அழைத்துச் சென்று குறித்த திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான தேவைப்­பாடு குறித்து விளக்­க­ம­ளித்தார். 


இரா­ஜாங்க அமைச்­ச­ருடன் காத்­தான்­குடி நகர சபையின் முன்னாள் தவி­சாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், இரா­ஜாங்க அமைச்சின் இணைப்புச் செய­லாளர் ருஸ்வின் மொஹமட் ஆகி­யோரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். 


காங்­கே­ய­னோ­டையில் மாதிரி மீனவ கிராமம் அமைப்­ப­தற்கு ஒவ்­வொரு மீனவ குடும்­பத்துக்கும் மல­சலகூட வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்­காக தலா 30 ஆயிரம் ரூபாவும், திருத்­தப்­ப­டாத வீடு­களை திருத்தி அமைப்­ப­தற்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதமும் வழங்க இதன்­போது அக்­குழு உடன்­பட்­டது. அதற்­க­மைய காங்­கே­ய­னோடை மீன்­பிடிச் சங்க தலை­வ­ருக்கு கல்­லடி மீன்­பிடி திணைக்­க­ளத்தின் ஊடாக அதற்­கான விண்­ணப்­பங்­களை வழங்­கவும் ஏற்­பா­டுகள் செய்து கொடுக்­கப்­பட்­டது. 


அவ்­வாறே, பால­மு­னையில் கட்­டப்­பட்டு பூர்த்தி செய்­யப்­ப­டாமல் இருக்கின்ற மீனவர் கட்­டட நிர்­மாணப் பண­ிகளை முழு­மைப்­ப­டுத்­து­வ­தற்குத் தேவையான மேல­திக நிதியை உட­னடியாக வழங்­கு­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை செய்­வ­தாக வும், அதற்­கு­ரிய மதிப்­பீட்­ட­றிக்­கையை கல்லடிமீன்­பிடி திணைக்­க­ளத்­தி­னுடைய தொழில்­நுட்ப உத்தியோகத்தர்கள் உட னடியாக செய்து அமைச்சிற்கு அனுப்பி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அக்குழு பணிப்புரை வழங் கியது. 


அத்துடன், மஞ்சந்தொடுவாய் மற்றும் பூநொச்சிமுனை பிரதேசத்திற்கும் கள விஜயம் மேற்கொண்ட அக்குழுவினர், அங்கு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் கலந்தாலோசித்து சாதகமான முடிவினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தனர். 

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த ஹிஸ்புல்லாஹ் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்த ஹிஸ்புல்லாஹ் Reviewed by Madawala News on 9/01/2017 10:51:00 AM Rating: 5