Ad Space avaiable

இச்சந்தர்ப்பததை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ...




அரசியல் யாப்புப் பேரவையின்  இடைக்கால அறிக்கையை பேரவையின் வழகாட்டுக்குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேரவையில் சமர்ப்பித்தார்.
 

அரசியல் அமைப்பு பேரவை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை பாராளுமன்றத்தில் கூடியது. அரசியல் அமைப்பு நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கையை பிரதமர் இதன் போது சமர்ப்பித்தார். 
 
அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் யாப்பு சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் வலியுறுத்தினார். 
 
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முற்போக்கு யோசனைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இன , சமய, சமூக, பாகுபாடற்ற அனைத்து இலங்கை மக்களுக்கும் பயன்பட கூடிய சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதே எமது நோக்கம். 

அத்துடன் பலம் வாய்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் அனைத்து இலங்கையர்களுக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்தும் புதிய புரட்சிகரமான விடயங்களை உள்ளடக்கியதாக இதற்கான சட்டமூலம் இருக்கும். 

ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் அமைதி மற்றும் சமாதானத்தை உருவாக்குவதற்கும் இச்சந்தர்ப்பததை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
 
காத்திரமான பொருளாதாரத்தை உருவாக்கி அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் எமது பொது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு இது போன்ற சட்டமூலம் மிகவும் இன்றியமையாததாகும். 

இதுவரை காலமும் நாம் அரசியல் வன்முறை மற்றும் மோதல்களில் சிக்கியிருந்தோம்.நமது பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அச்சுறுத்தலாக நிலவிய பிளவுகள் மற்றும் இடைவெளிகளை அகற்றுவதற்கான பாலம் ஒன்றை உருவாக்குவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு எமக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் யோசனைகளும் இதில் காணப்படுகின்றன. 

இலங்கை ஒற்றையாட்சி அரசாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஐக்கிய இலங்கையை ஏற்றுக் கொள்ளவும், அதிகாரத்தை பகிரவும் அனைவரும் தயார் நிலையில் இருப்பதாக பேரவையின் வழகாட்டுக்குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார்.

அதே நேரம் புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு இருக்கும் முன்னுரிமையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என அவர் குறிப்பிட்டார்.
 
எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் உட்பட அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

இச்சந்தர்ப்பததை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ... இச்சந்தர்ப்பததை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  ... Reviewed by Madawala News on 9/21/2017 09:28:00 PM Rating: 5