Ad Space Available here

இலங்கை முஸ்லீம் சமூகம் கயவர்களால் காவு கொள்ளப்பட்டு விட்டது.!
இலங்கையில் இன்று நிகழ்ந்து வரும் அரசியல் விடையங்களில் முஸ்லிம் பிரதிநிதிகளின் மெளனிப்பு எமது சமூகத்தை அடிமைப்பட்ட சமூகமாக மாற்றிவிட்டது. இது யாவரும் அறிந்த விடையமும் கூட அண்மையில் பாராளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட 20 ம் திருத்தச் சட்டமூலம் மற்றும் கிழக்கு மாகாணசபை இத்திருத்தத்திற்கு முதல்வர் ஹாபீஸ் நசீரின் வழிகாட்டலில் ஆதரித்தமை மற்றும் பாராளுமன்றத்தில் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள் வாக்களித்தமை தொடர்பில் எமது சமூகம் இந்த நாட்டில் எதிர்காலத்தில் அன்றாடம் வாழ்வதற்கான வாழ்வியல் போராட்டத்திற்காக தயார்படுத்தலில் சூட்சுமுகமாக தள்ளிவிடப்பட்டுள்ளார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உதாரணமாக இந்திய வாழ் முஸ்லீம்களின் தற்போதைய நிலையை கவனத்தில் கொள்ள முடியும். 

முழு உலகமும் சியோனிஷ சித்தாந்தத்திற்குள் உள்வாங்கப்பட்டு இருக்கும் நிலையில் தாங்கள் தான்  முஸ்லீம் ஏகாதிபத்திய நாடுகள் என்றும் முஸ்லீம் தேசியம் என்றும் மார்தட்டும் இஸ்லாமிய குடியரசுகளாக இருக்கும் அரபு லோகமும் வாய் மூடி இருப்பதை நாம் வியக்கத் தேவையில்லை எப்படியாயினும் எமது பாதுகாப்பு எமது நாட்டில் எம்மால் உறுதிபடுத்தப்படவேண்டும் அதையும் இழந்து வருகின்றோம் சமீப காலமாக.

இந்த அடிப்படையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லீம் சமூகம் உலகெங்கும் நெருக்கடியான நிர்கதியான நிலமைகளில் அதாவது கொலை ,வன்புனர்வு , சிறுவர்களை துன்புறுத்தி கொலை செய்தல், பொருளாதாரம் மற்றும் உடமைச் சேதம் மற்றும் தங்கள் பூர்வீக நிலங்களை விட்டும் துரத்தியடிப்பதை நாளாந்தம் எம் கண்ணூடாக காண்கின்றோம். 

பெரும் வல்லரசுகள் சேர்ந்து உருவாக்கிய இலங்கை நாட்டின் நல்லாட்சி என்று அழைக்கப்படும் அரசாங்கத்தில் இருக்கும் இனவாதிகள் சிறுபான்மை சமூகத்தினை ஒடுக்குவது தொடர்பான விடயத்தில் மிகுந்த புத்திசாலித்தனமான நகர்வுகளை முன்னெடுக்கின்றார்கள். அதற்கு எமது முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளும் சோரம் போய்யுள்ள வரலாற்று துரோகத்தை மறக்கவோ/மண்ணிக்கவோ முடியாது. 

இன்று நாம் அரசியல் ரீதியாக அவதானிக்க வேண்டும் எமது அயல் நாடான இந்தியாவை. ஏன்னென்றால் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னனி தான் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றமும். முழு இந்தியாவிலும் ஆதரவை தளுவாத BJP என்ற ஒரு தனி நபர் இனவாத கருத்தியல் அரசியல் இயக்கத்தினை கொண்ட நரந்திர மோடி பிரதமராக தெரிவு செய்யப்பட்டது.

மேலும் இவர் குஜராத்தில் எமது முஸ்லீம் சமூகத்தின் மீது இனவெறி தாக்குதல் நடத்தி எமது பச்சிளம் பாலகர்களின் இரத்தத்தை தன் நெற்றியில் திலகமிட்டு ஆட்சி பீடம் ஏறியவர் என்பதும் வரலாறுகள் கூறி நிற்கிறது. 

மேலும் இந்த மோடி அமெரிக்காவின் செயற்பாட்டு முகவர் இதே போன்று தான் வடகிழக்கு தமிழர்களை கருத்தியல் ரீதியாக சிதைத்து அவர்களின் இரத்தத்தில் குளிர் காய்ந்து, சிங்கள முஸ்லிம் இனவாதத்தை தோற்றுவித்து ஆட்சி பீடம் ஏறியவர் தான் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்க.

இங்கு இந்தியாவை எடுத்துக்கொண்டோமேயானால் கேர்ளா, மேற்கு வங்காளம் கம்யூனிசச் சித்தாந்தத்திற்கு உட்படும். தமிழ் நாடு திராவிட சித்தாந்தத்திற்கும் உற்பட்டு இருந்தது. இதனை பெரியார் மற்றும் காயிதேமில்லத் போன்றோர்கள் இந்துத்துவ இனவாத சிந்தனைகளுக்கு அப்பால் சென்று அரசியல் ரீதியாக தமிழ் முஸ்லீம் உறவை வளப்படுத்தி அரசியல் செய்த வரலாறுகளும் உண்டு.
 
இவ்வாறான நிலமைகளை களைந்து இன்று நரேந்திர மோடி தனது பதவியினை மீண்டும் தக்க வைப்பதற்கு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு நேரடி அரசியலில் இறங்காமல் இந்தியாவின் தமிழ் நாட்டில் திராவிடர், தமிழர் என்ற கருத்தியல் ரீதியான அசைவினை ஏற்படுத்தி வைகோ, திருமாவளன் சீமான் போன்றோரை குழப்பி தனது அரசியல் காய் நகர்த்தலை செய்து தமிழ் நாட்டு மக்களை தெளிவு பெற முடியா வண்ணம் நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார்.

இதில் திராவிடம் தோற்றுக் கொண்டு இருக்கிறது. அதே வேளை இந்துத்துவ தமிழ் சிந்தனை வாதம் உருவெடுத்துள்ளது.இருப்பினும் இந்திய முஸ்லீம்கள் விடயத்தில் வேறொரு திசையில் இருந்து கொண்டு முஸ்லிம் தனியார் சட்டம், மாட்டுக்கறி போன்ற விடையங்களை பயன்படுத்தி இந்துத்துவ பாசிசவாதத்தையும் கிளப்பி விட்டு இருக்கிறார். 
இதன் காய்ச்சல் தான் இலங்கையிலும் காய்கிறது இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவை அனைத்தும் அமெரிக்க உளவாளிகளின் வழிகாட்டல். இவ்வாறான இந்நிலைகளை தொடர்ந்து தொடர்ந்தும் மோடி பிரதமராக வருவது தென்கிழக்காசியாவுக்கே அச்சமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இந்த அடிப்படையில் இலங்கையின் கடந்த ஆட்சியாளர்களை புறந்தள்ளி ஒதுக்கி விட்டு தங்களுக்கு இசைவானவர்களான இந்த நல்லாட்சியின் முக்கிய பிரமுகர்களை வைத்து அரசியல் இலாபம் தேடும் சர்வதேசம்.
எமது அரசியல் சாராத தனிநபர் சமூக இயக்க ரீதியான போராட்ட வாதிகளை பகடைக்காயாக பயன்படுத்துவதற்காக அமைதி காத்துக் கொண்டு இருக்கிறது. அவதானம் எமது முஸ்லீம் உடன் பிறப்புக்களே!!! 

கருத்தியல் ரீதியான அசைவியக்கம் தான் அரசியலைத் தீர்மானிப்பது இந்த அடிப்படையில் அண்மையில் SLTJ யின் முக்கிய பிரமுகர் ரஸ்மின் அவர்களின் உரை காலத்திற்கு அவசியமானதொன்று நிதர்சனமான உண்மை. இருப்பினும் எம் சகோதரரின் ஆதங்கமான மனநிலையை கண்டுகொண்டு  அவரையும் இந்த மேற்குலகின் அரசியல் முகவர்கள் பலி எடுத்து விடுவார்களோ என்ற அச்சம் அவரது உரையை கேட்டதில் இருந்து என்னுள் அங்கலாய்க்கிறது.

சிறுபான்மை சமூகத்தின் உண்மையான உரிமை போராட்டங்களை சர்வதேசத்தில் மிகைப்படுத்திக்காட்டி எம்மை இஸ்லாமிய அடிப்படை வாதிகள் என்ற தொனியில் முத்திரை குத்துவதற்கு கங்கனம் கட்டிக்கொண்டு இந்த அமெரிக்கா, நோர்வே, இஸ்ரேல் போன்ற சர்வதேச சக்திகள் மிகச் சரியான சந்தர்பத்தை எதிர் பார்த்தவன்னம் இருக்கிறார்கள்.

ஏன் என்று சொன்னால் இலங்கையின் முன் நாள் நீதியமைச்சர் இனவாத அடிப்படையிலான இயக்கங்களின் வகுதிக்குள் தவ்ஹீத் ஜமாத்தினை பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த 20ஆவது திருத்தச்சட்டம் மற்றும் தேர்தல் முறைமை சட்டங்களில் சிறுபான்மை சமூகங்களுக்கு எது வித காப்பீடுகளும் நிவர்த்திக்கப்பட்டிராத சந்தர்பங்களில் அநியாயமாக சிறுபான்மை முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட போகின்றது என்று நன்றாகவே தெரிந்து கொண்டும் பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பின் போது எமது சமூகத்தின் உரிமையில் அரசியல் ரீதியான அநியாயத்தினை செய்த முஸ்லீம் பிரதிநிதிகளின் 
அரசியல் இயலாமையினை மக்களிடையே  வெளிப்படுத்தும் ரஸ்மின் அவார்களின் பேச்சை கல்வியல் சமூகம் வரவேற்கின்றது.

ஆனால் SLTJ என்ற பெயர் தாங்கிய பதாகையுடன் முன் நின்று பேசுவது இன்றய நாட்டின் சூழ்நிலையில்  அவ்வளவு உசிதமானதுமல்ல அல்லது அவ்வாறான பெயர் தாங்கிய பதாகைகள் இன்னுமொரு இஸ்லாமிய அடிப்படை வாத கிளர்ச்சியாளர்கள் என்ற சிந்தனையை மாற்று சமூகத்தவரிடம் தோற்றுவித்து விடும். இது இலங்கையில் வாழும் சிறுபான்மையான முஸ்லீம்களை இனவாதிகள் என்ற பாதாளத்துக்குள் தள்ளிவிட்டு விடும் என்பதில் ஐயமில்லை. 

இவ்வாறான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு SLTJ இயக்கத்தின் பெயரை முதன் நிலைப்படுத்தாமல் தமிழ், முஸ்லீம், சிங்கள சமூகத்தின் புத்திஜீவிகளையும் மற்றும் இந்த சமூக துரோகங்களை பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதிகள் இளைக்கப் போகிறார்கள் என்று எதிர்வு கூறிய மற்றும் இந்த துரோகத்தனமான நிகழ்ச்சி நிரல்களை பல மேடைகள் அமைத்து முஸ்லீம் அரசியல் வாதிகளுக்கும், மக்களிடையே  விழிப்பூட்டல்களையும் முன்னெடுத்த கிழக்கின் முதுசமான அரசியல் தலைமைகளும் உள்ளனர் உங்களது விளிப்பூட்டல் நிகழ்ச்சிகளுக்கு அவர்களிடமும் ஆலோசனைகளை கேட்டு ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகளின் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஊடாக நீங்கள் தனித்தல்லாமல் உங்கள் கருத்தை பணியினை அரசியல் மயப்படுத்துங்கள் தயவு செய்து இயக்க மயப்படுத்தி எமது இளைஞர்களை எமது சமூகத்தை இனவாத கருத்தியலுக்கு ஒப்பானவர்களாக காட்டிவிடாதீர்கள்.

மாற்று மத சகோதரர்களினால் எமக்கு பூசப்பட காத்திருக்கின்ற இனவாத சாயத்தினை களைய வேண்டிய காலத்தின் கட்டாய தருணத்தில் இருக்கின்றோம் சகோதரர்களே!!!
இலங்கை முஸ்லீம் சமூகம் கயவர்களால் காவு கொள்ளப்பட்டு விட்டது.! இலங்கை முஸ்லீம் சமூகம் கயவர்களால் காவு கொள்ளப்பட்டு விட்டது.! Reviewed by Madawala News on 9/24/2017 10:54:00 PM Rating: 5