Ad Space avaiable

3 மாகாண சபைகளுக்கான தேர்தலை பிற்போட தீவிர முயற்சி !


இம்மாத இறுதியில் நிறைவடைய உள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை பிற்போடுவதற்கு அரச தரப்பு கடும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி பா உறுப்பினர்களின் குழு கூட்டத்தில் இது தொடர்பில் தீவிரமாக கலந்துரையாடப்பட்டுள்ள அதேவேளை 20ம் திருத்தமும் ஆட்டம் கண்டுள்ள நிலையில்  மூன்று மாகாண சபைகளையும் ஆளுனரின் கீழ் கொண்டுவருவதற்க்குரிய முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அரச உயர்மட்டங்களில்  இருந்து கசிந்துள்ள  செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு அச்சப்படுவதாக எதிர்கட்சிகள் விமர்சனம் செய்துவரும் நிலையில் அரசு தேர்தலை பிற்போட கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
3 மாகாண சபைகளுக்கான தேர்தலை பிற்போட தீவிர முயற்சி !  3 மாகாண சபைகளுக்கான தேர்தலை பிற்போட தீவிர முயற்சி ! Reviewed by Madawala News on 9/19/2017 11:09:00 AM Rating: 5