tg travels

நல்லாட்சி அரசிலும், சிங்கள முஸ்லிம் தமிழ் ஒற்றுமைகள் சீர்குலையும் அபாயம்!


தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளை ஒரு சில சிங்கள அமைப்பினர் மேற்கொள்ளும் பிழையான நடவடிக்கைகளால் ஒற்றுமைகளை இழக்க வேண்டிய சந்தர்ப்பங்களுக்கு மக்கள் உள்வாங்கப்பட்டுள்ளாதவும், முஸ்லிம் தமிழ் பிரதேசத்தங்களில் இடம்பெறும் அத்துமீறல்களால் இன ஒற்றுமை கடந்த ஆட்சி போல் இல்லாமல் விடும் அபாயம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார். 

 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின்முயற்சியினால் மட்டக்களப்பு, மண்டூர்பிரதேசத்தில் புதிதாக 5.3 மில்லியன் ரூபாநிதியில் அமைக்கப்பட்ட ஆயுள்வேத மத்தியமருந்தகத்தினை அம்மக்களிடம் கையளிக்கும்நிகழ்வு இன்று (04.09.2017) இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

 

அவர் அங்கு மேலும் கருத்து கூறுகையில்; 

 

ஸ்ரீலங்கா முஸ்ளிம் காங்கிரஸிம் தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஒற்றுமையுடன்நல்லாட்சி அரசில் எமது ஒற்றுமையையும்அபிவிருத்திகளையும் மேற்கொண்டுவருகின்றோம். கடந்த ஆட்சியில் சிலபெளத்த அமைப்புக்களில் தமிழ் முஸ்லிம்ஒற்றுமைகளையும் சீரழித்து இதனால்அவ்வாட்சியை சிறுபான்மை மக்கள்விரட்டினார். ஆனால் இன்றும் நல்லாட்சிஅரசிலும் சில பெளத்த அமைப்புக்களின்கொடுபுடிகள் அம்பாறை மாவட்டத்தில்அரங்கேற்றப்பட்டுகின்றது.

 

இறக்காமம், மானிக்கமடு பிரதேசத்தில் தமிழ்மக்களின் காணிகளை கொள்வணவு செய்துசிங்கள மக்களே இல்லாத இடத்தில் சிங்களபுத்தர் சிலைகளை அமைப்பதற்கு முஸ்தீபுகள்இடம்பெற்றாலும் அவற்றை நாம்முறியடித்துள்ளோம். இவ்வாறு தமிழ் முஸ்லிம்சிங்கள ஒற்றுமைகள் சீரழிக்கப்படுகின்றதைநாம் அவதானத்துடன் செயற்பட்டு அவற்றுக்குசரியான தீர்வுகளை மேற்கொண்டுவருகின்றது. தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைகள் மூலமே சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியும். 

 

மாகாணரீதியாக சுதேசத்திணைக்களம்இன்று அதிக வளர்ச்சியடைந்து வருவதைஇட்டு நான் அகம் மகிழ்கின்றேன். நாட்டுவைத்திய முறைமை இன்று எமது கிழக்குமாகாணத்தில் அதிகரித்து வருகின்றது. நான்மாகாண அமைச்சை பொறுப்பெடுத்த போதுசுதேச திணைக்களத்திற்கான நிதிபோதாமையாக இருந்ததைகவனத்திற்கொண்டு சில திட்டங்களைவகுத்து தற்போதுசுதேசத்திணைக்களத்திற்கும், சுகாதாரத்திணைக்களத்திற்கும் நிதிகளைப் பெற்றுவைத்தியசாலைகளை மாகாண ரீதியாகசிறப்பாக செயற்பட முயற்சி செய்து சிறந்துமுறையில் மேற்கொண்டு வருகின்றோம். அதுமாத்திரம் இன்றி தற்காலிய இடங்களில்உள்ள வைத்தியசாலைகளை இன்று நிரந்திரகட்டிடங்களுக்கு மாற்றியமைப்பதற்கானநடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

 


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு திறந்துவைத்தார். இதன் போது கெளரவஅதிதிகளாக கிழக்கு மாகாண விவசாயஅமைச்சர் துறைராஜசிங்கம், கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான நடராஜா, துறைரட்னம், கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர்முருகாணந்தன், கிழக்கு மாகாண சுதேசதிணைக்கள மாகாணப் பணிப்பாளர்வைத்தியர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்களுடன்மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்அதிகாரிகள், வைத்திய அத்தியட்சகர்கள், பொதுமக்கள் என பலரும்கலந்துகொண்டனர்.

நல்லாட்சி அரசிலும், சிங்கள முஸ்லிம் தமிழ் ஒற்றுமைகள் சீர்குலையும் அபாயம்! நல்லாட்சி அரசிலும், சிங்கள முஸ்லிம்  தமிழ் ஒற்றுமைகள் சீர்குலையும் அபாயம்! Reviewed by Madawala News on 9/04/2017 06:41:00 PM Rating: 5