tg travels

கண்டி ரயில் நிலையத்தில் புகையிரதம் தீப்பற்றுவதாக போலியான வீடியோ தகவல்.


கண்டி ரயில் நிலையத்தில் புகையிரதம் ஒன்று தீப்பற்றுவதாக வீடியோ ஒன்று facebook Live ஆகவும், சில பக்கங்களில் வீடியோவாகவும் பகிரப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் 2011 ஜூலையில் இடம்பெற்ற சம்பவமாகும். இதனை station master operator சற்றுமுன் எம்முடன் உறுதி செய்தார். 

அதேவேளை இவ்வாறான வீடியோ தொடர்பில் இன்று மாலை தமக்கு அழைப்புகள் வந்ததாகவும். பழைய வீடியோவை பகிர்ந்து பதட்டத்தை ஏற்படுத்துபவர்கள் மீது போலீஸ் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனவும் எம்மிடம் சற்றுமுன் தெரிவித்தார்.

மேலதிக விபரம் வேண்டுபவர்கள் கண்டி புகையிரத நிலையத்தை தொடர்பு கொள்ளவும் (081) 222 2271

பி:கு - 2011 இல் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் இடம்பெறவில்லை. அப்போது பதிவாகிய வீடியோக்களே live broadcast software மூலம் இன்று நேரலை செய்யப்பட்டன.
கண்டி ரயில் நிலையத்தில் புகையிரதம் தீப்பற்றுவதாக போலியான வீடியோ தகவல். கண்டி ரயில் நிலையத்தில் புகையிரதம் தீப்பற்றுவதாக போலியான வீடியோ தகவல். Reviewed by Madawala News on 9/16/2017 07:24:00 PM Rating: 5