Ad Space avaiable

கட்டாக்காலி மாடுகளினால் அதிகமான விபத்துக்கள். திருகோணமலை மக்கள் விசனம்.



(ஹஸ்பர் ஏ ஹலீம் ) 

திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் அதிகரித்தள்ள கட்டாக்காலி மாடுகளினால் அதிகமான விபத்துக்கள் ஏற்படுகின்றது என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையின் சுற்றுலாத்தளமாக தற்போது பிரசித்தி பெற்றள்ள மூன்றாம் கட்டை மற்றும் அலஸ்தோட்டம் பகுதியில் மாலை நேரங்களில் அதிகமான வாகன நெறிசல் உள்ள நேரங்களில் கூட்டமாக மாடுகள் வீதியை கடப்பதாலும் வீதிகள் ஓரம் அங்குள்ள கடைகளின் முன் நிற்பதாலும் இந்த விபத்துக்கள் அதிகமாகின்றது மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கும் அசௌகரிக்த்தை விளைவிக்கிறது.

திருகோணமலை நகரில் இருந்து நிலாவெளி புல் மோட்டை போன்ற பகுதிகளுக்கு செல்லும் இப்பிரதான பாதையில் அதிகமான வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளும் தற்போது அதிகமாக தங்கி இருக்கின்றனர்.இதன் போது இப்பகுதி இந்த நேரத்திலும் வாகன நெறிசல் அதிகரித்து காணப்படும் பிரதேசமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டாக்காலி மாடுகளினால் அதிகமான விபத்துக்கள். திருகோணமலை மக்கள் விசனம்.  கட்டாக்காலி மாடுகளினால் அதிகமான விபத்துக்கள். திருகோணமலை மக்கள் விசனம். Reviewed by Madawala News on 9/21/2017 10:56:00 AM Rating: 5