Ad Space avaiable

ரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பில் கேள்வி கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட அமைச்சர்கள்..




ரோஹிங்யா அகதிகள் இலங்கையில் தஞ்சமடைவதாக பரவும் புரளி தொடர்பில் கேள்வி எழுப்பி பிரதமரிடம் அமைச்சர்கள் சிலர் வாங்கிக்கட்டிக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று மாலை அலறிமாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி பா உறுப்பினர்களின் குழு கூட்டத்தில் ரோஹிங்யா அகதிகள் நாட்டுக்குள் தஞ்சம் புகுவதாக கதை பரவுகிறதே என பிரதமரிடம் பெரும்பான்மை அமைச்சர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்போது கடுப்பான பிரதமர்  உங்களுக்கு தலை சரியில்லையா என்ற தொணியில் அவர்கள் எவ்வாறு இங்கு வரமுடியும் மியன்மார் எங்கு உள்ளது இலங்கை எங்கு உள்ளது என கேட்டுள்ள அதேவேளை முட்டாள்தனமாக இல்லாமல் உருப்படியாக ஏதாவது கேட்குமாறு பதில் அளித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் மூன்று வெவ்வேறு அமைச்சர்கள் இதே விடயத்தை கதைக்க முனைந்து பிரதமரிடம் வாங்கிக்கட்டிக்கொண்டாத அங்கிருந்த முக்கியஸ்தர் ஒருவர் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.


ரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பில் கேள்வி கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட அமைச்சர்கள்.. ரோஹிங்யா அகதிகள் விவகாரம் தொடர்பில் கேள்வி கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட அமைச்சர்கள்.. Reviewed by Madawala News on 9/19/2017 05:14:00 PM Rating: 5