Kidny

Kidny

ரோஹிங்யா குறித்தும் மோடி சுகியுடன் கலந்துரையாடல் !




மியான்மர் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டின் அரசியல் தலைவர் மற்றும் ஆலோசகர் ஆங் சாங் சூகியுடன் ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது ரக்கைன் மாநிலத்தில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது.அங்கு பொது மக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் அப்பாவி உயிர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது தொடர்பில் இந்திய பிரதமர் தனது வருத்ததினை தெரிவித்தார்.

மியான்மரின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை காக்க அனைத்து பங்குதாரர்களும் இணைந்து செயலாற்ற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மார் சமீபத்தில் எதிர்கொண்ட பயங்கரவாத அச்சுறுத்தலின் போது உறுதியான நிலைப்பாட்டை எடுத்தமை பற்றி சுகி இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் தங்கள் மண்ணில் மட்டுமல்ல அண்டை நாடுகளின் மண்ணில் வேர்  விட அனுமதிக்கப்படுவதில்லை என்பதை இந்தியாவும் மியான்மரும் உறுதிப்படுத்தியுள்ளதாக ஆன் சான் சுகி குறிப்பிட்டுள்ளார்.


மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது ராணுவமும் பவுத்த பேரினவாதிகளும் இனப்படுகொலை நிகழ்த்தி வருகின்றனர். 

ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் என்பதால் அவர்களை நரவேட்டையாடுகிறது ராணுவம்.


இதையடுத்து ஒரு லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து தப்பி வங்கதேசத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். 

பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்தியாவுக்குள்ளும் தஞ்சமடைந்துள்ளனர்.சுமார் 30,000க்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்கதேசத்தை ஒட்டிய மலைப்பகுதிகளில் உணவும் மருந்தும் இன்றி பட்டினியாலும் நோயாலும் பரிதவிக்கின்றனர். 

இந்த சம்பவங்களுக்கு மத்தியில் இந்திய பிரதமர் ஏற்கனவே திட்டமிட்ட மியன்மார் சுற்றுப்பயனத்தை மேற்கொண்டுள்ளார்.

ரோஹிங்யா குறித்தும் மோடி சுகியுடன் கலந்துரையாடல் ! ரோஹிங்யா குறித்தும் மோடி சுகியுடன் கலந்துரையாடல் ! Reviewed by Madawala News on 9/06/2017 05:12:00 PM Rating: 5