Kidny

Kidny

சிறைக்கு செல்ல நேரிட்டாலும் நாட்டை விட்டு ஓட மாட்டார் ; பொதுபல சேனா



ஞானசார தேரர் எங்கும் தப்பியோடவில்லை எனவும் அவர் ஏற்கனவே நாடு திரும்பிவிட்டார் எனவும் பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே குறிப்பிட்டார்.

ஞானசார தேரர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக சில சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் அதனை மறுத்துள்ள பொதுபல சேனா நாளை செவ்வாய் இடம்பெறும் அவ்வமைப்பின் விஷேட ஊடக மாநாட்டில் அவர் கலந்துகொள்வார் என  தெரிவித்துள்ளது.

சிறைக்கு சென்றாலும் அவர் நாட்டை விட்டு தப்பியோட மாட்டார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ள அதேவேளை நாளை இடம்பெறும் ஊடக மாநாட்டில் அவர் பர்மா விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறைக்கு செல்ல நேரிட்டாலும் நாட்டை விட்டு ஓட மாட்டார் ; பொதுபல சேனா சிறைக்கு செல்ல நேரிட்டாலும் நாட்டை விட்டு ஓட மாட்டார் ; பொதுபல சேனா Reviewed by Madawala News on 9/18/2017 08:05:00 AM Rating: 5