Ad Space avaiable

கிழக்கு மாகாண சபையினூடாக அமுல்ப்படுத்தப்படவுள்ள ஐ ரோட் திட்டத்திற்குள் காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகள்.











எம்.ரீ. ஹைதர் அலி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபையினுடைய வேண்டுகோளுக்கமைவாக தெரிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டமே “Integrated Road Investment Programme” எனப்படும் “ஐ ரோட் (I Road)” வேலைத்திட்டமாகும். 

இவ்வேலைத்திட்டத்தினை கிழக்கு மாகாண சபையினூடாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் அவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் முற்றுமுழுதாக கிழக்கு மாகாண சபையினூடாக இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 73.22 கிலோமீற்றர் நீளமான வீதியினை காபெட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்குரிய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைவாக குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய வீதிகளை தெரிவு செய்வது தொடர்பான கூட்டமொன்று கடந்த ஆண்டு 10.05.2016ஆந் திகதி-செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலத்தில் நடைபெற்றது.

இதன்போது ஐ ரோட் திட்டத்திற்குள் கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச சபைகளில் காணப்படும் சில வீதிகளை காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் அவர்களின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவு செய்திருந்தார்.

ஐ ரோட் திட்டத்திற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நஸீர் அஹமட் அவர்களின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் தெரிவு செய்து வழங்கப்பட்ட வீதிகள் மற்றும் அவற்றின் விபரம் பின்வருமாறு 

புனரமைப்புச் செய்யப்படவுள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளும் அவற்றின் நீளங்களும் பின்வருமாறு.

மாஞ்சோலை இளைஞர் கழக வீதி - 0.80
மாஞ்சோலை மீள்குடியேற்ற கிராம வீதி - 1.00
காவத்தமுனை பாடசாலை வீதி - 0.50
காவத்தமுனை துறையடி வீதி - 0.50
காவத்தமுனை மீரான் ஹாஜியார் வீதி - 1.00
காவத்தமுனை ரஹ்மத் மஸ்ஜித் வீதி - 1.00 
தியாவட்டவான் பாலைநகர் வீதி - 0.90
வடமுனை. ஊத்துச்சேனை வீதி - 1.50 
பொத்தானை பிரதான வீதி - 1.00

புனரமைப்புச் செய்யப்படவுள்ள கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளும் அவற்றின் நீளங்களும் பின்வருமாறு.

மாவடிச்சேனை ஹபீப் கங்காணியார் வீதி - 0.70
செம்மண்ணோடை அல்-ஹம்றா பாடசாலை வீதி - 1.00
செம்மண்ணோடை அஹமட் ஹிறாஸ் வீதி - 0.50
பிறைந்துறைச்சேனை பன்சால வீதி - 0.55
வாழைச்சேனை ஆலிம் வீதி - 0.30
வாழைச்சேனை அஹமட் ஜீ.எஸ். வீதி - 0.50 
வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதான வீதி - 1.66

புனரமைப்புச் செய்யப்படவுள்ள கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளும் அவற்றின் நீளங்களும் பின்வருமாறு.

காரமுனை பிரதான வீதி - 2.50

இதற்கமைவாக கடந்த 18.05.2016ஆந்திகதி-புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய  உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கா. சித்திரவேல் அவர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட BT/RACLG/IRP/2016 இலக்க கடிதத்திற்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் பரிந்துரைக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட வீதிகள் அனைத்தும் ஐ ரோட் திட்டத்திற்குள் காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதனை உறுதிப்படுத்தி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய அனுமதி கிடைக்கப்பெற்றது.

இதன்பிரகாரம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் பயனாக கடந்த 20.03.2017ஆந்திகதி-திங்கட்கிழமை கிழக்கு மாகாண திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளர் வீ. மகேந்திரராஜா அவர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட EP/08/PL/iRoad/2017 இலக்க கடித்திற்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட மேற்குறித்த வீதிகள் ஐ ரோட் திட்டத்தினூடாக காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்வதற்காக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 

தற்போது இவ் ஐ ரோட் வேலைத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள வீதிகளுக்கான மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வருவதோடு இன்னும் ஒரு சில மாதங்களில் இவ்வேலைத்திட்ட புனரமைப்பு வேலைகளை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

10.05.2016ஆம் திகதி-செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆனையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஐ ரோட் திட்டத்திற்கான வீதிகளை தெரிவு செய்யும் கூட்டத்தொடரின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஐரோட் திட்டத்திற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட வீதிகளை உறுதிப்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆனையாளர்  அவர்களினால் கடந்த 18.05.2016ஆந்திகதி-புதன்கிழமை  திகதியன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.

ஐ ரோட் திட்டத்திற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட வீதிகள் ஐ ரோட் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது என்பதனை உறுதிப்படுத்தி அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சம்பந்தமான கிழக்கு மாகாண திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளர் அவர்களினால் கடந்த 20.03.2017ஆந்திகதி-திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் மற்றும் வீதிகளின் விபரம் என்பன இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய  உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கா. சித்திரவேல் மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
கிழக்கு மாகாண சபையினூடாக அமுல்ப்படுத்தப்படவுள்ள ஐ ரோட் திட்டத்திற்குள் காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகள். கிழக்கு மாகாண சபையினூடாக அமுல்ப்படுத்தப்படவுள்ள ஐ ரோட் திட்டத்திற்குள் காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிகள். Reviewed by Madawala News on 9/21/2017 08:04:00 PM Rating: 5