Kidny

Kidny

அகதிகளை பிரத்தியேக தீவுக்கு அனுப்ப யோசனை




மியன்மார் வன்முறைகளால் இடம்பெயர்ந்து பங்களாதேஷில் தஞ்சமடைந்த சுமார் 2,000 ரோஹிஞ்யா முஸ்லிம்களை பங்களாதேஷ் அதிகாரிகள் தனியான ஒரு தீவுக்கு வெளியேயேற்றி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரோஹிங்யாவில் இருந்து தஞ்சம் கோரி வருபவர்களை நாம் வரவேற்கவில்லை எனவும் ஏற்கனவே எமது நாட்டில் 4 லட்சம் ரோஹிங்யர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் பங்களாதேஷ் அறிவித்துள்ளது.

நாங்கள் அவர்கள் எம் நாட்டுக்குள் நுழைவதை தடுக்க  சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக கூறியுள்ள பங்களாதேஷ் பிரதமரின் அரசியல்  ஆலோசகர்  H.T. Imam மலைகள் மற்றும் காடுகள் ஊடாக அவர்கள் சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்குள் உற்புக முயற்சி செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வலுப்பெற்றுள்ளன.
மியன்மார் இராணுவத்தின் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் நாட்டிலிருந்து வெளியேறும் ரோஹிங்யாக்கள் பங்களாதேஷிற்கு தஞ்சம் கோரி செல்கின்றனர்.

பலர் எல்லைப் பகுதியில் உள்ள நாஃப் நதியைக் கடந்து பங்களாதேஷில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவுக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.இந்த நிலையில்,அங்கு தஞ்சமடைந்துள்ள சுமார் 2,000-க்கும் மேற்பட்டோரை பங்களாதேஷ் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

மியன்மாரின் ரக்கைன் மாகாணத்தில் வன்முறை வெடித்தது முதல் தற்போது வரையில், 125 ஆயிரம்  ரோஹிங்யா அகதிகள் எல்லையைத் தாண்டி பங்களாதேஷ் சென்றுள்ளதாகவும் அவர்கள் ஏற்கன்வே அங்கு முகாம்களில் தங்கியுள்ள 4 லட்சம் ரோஹிங்கயர்களுடன் இணைத்து விடப்பட்டுள்ளதாக  ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரோஹிங்யா  விவகாரத்தில் மியன்மார் அதிபருக்கான ஆலோசகர் ஆங் சாங் சூ கீ தலையிட வேண்டும் என சர்வதேசம் கோரியுள்ளது.


அகதிகளை பிரத்தியேக தீவுக்கு அனுப்ப யோசனை அகதிகளை பிரத்தியேக தீவுக்கு அனுப்ப யோசனை Reviewed by Madawala News on 9/05/2017 09:25:00 PM Rating: 5