Kidny

Kidny

பதவி, ஆட்சி அதிகாரங்களுக்காக ராஜித எதையும் செய்ய துணிந்தவர்..



நேற்று கொண்டுவரப்பட்ட மாகாண சபை தேர்தல் முறைமை மாற்ற சட்ட மூலமானது முஸ்லிம் சமூகத்துக்கு மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இது யாவரும் அறிந்த விடயமாகும். இதன் போது அமைச்சர் றிஷாதும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் விடாப்பிடியாக நின்று அரசின் செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் எல்லை மீறிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, இவ்விருவரையும் தாக்க சென்றுள்ளதாக சில ஊடகங்கள் தகவல் மூலம் அறிய முடிகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய ஆட்சிக் காலமானது சர்வதிகாரம் நிறைந்தது என பலரும் கூறிய போதிலும், முஸ்லிம் அமைச்சர்களுக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ இப்படி யாரும் செய்ததான வரலாறில்லை. 

இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்றால் அதனை முஸ்லிம் அரசியல் வாதிகள் எதிர்ப்பது, சுட்டிக் காட்டுவது அவர்களது கடமை. உரிய முறையில் இச் சீர் திருத்தத்தை கொண்டு வந்து, அவர்களோடு கலந்துரையாடி, மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தால் இத்தகைய பிரச்சினைகள் எழுந்திருக்க வாய்ப்பில்லை. தவறுகள் அனைத்தும் இவ்வாட்சியாளர்கள் மீதுள்ள போது முஸ்லிம் அமைச்சர்களை தாக்க செல்வதானது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.

இதில் அமைச்சர் றிஷாத் ஒரு கட்சியினுடைய தலைவர். அவரது கட்சி சார்பாக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இவரது கட்சி சொல்லும்படியான இலங்கை முஸ்லிம்களின் வாக்கையும் பெற்றிருந்தது. இப்படியான ஒருவரை தாக்க செல்வதானது முஸ்லிம் சமூகத்தையே தாக்கச் செல்வதற்கு ஈடாகும். இப்படியான பண்புடையவர்கள், இலங்கையில் நடந்தேறிக் கொண்டிருக்கும்  முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத செயற்பாடுகளின் பின்னால் இருக்க மாட்டார்கள் என்பதில் என்ன உத்தரவாதமுள்ளது. மக்கள் செல்வாக்கு பற்ற இவர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? அமைச்சர் றிஷாதை பொறுத்த வரையில் நல்லாட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான பண்புடைய அமைச்சர் ராஜித சேனாரத்தன ஜனாதிபதியாகும் நினைப்பில் உள்ளார். இவர் ஜனாதிபதியாக வந்தால் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்பதை சற்று சிந்தனை செய்து பாருங்கள். முஸ்லிம்கள் மிக விழிப்பாக செயலாற்ற வேண்டிய காலமிது. இதிலேயே இப்படி என்றால் முழு அரசியலமைப்பிலும் முஸ்லிம்கள் பதிக்கப்படும் வகையில் எதை எதையெல்லாம் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.
-கூட்டு எதிர்க்கட்சி ஊடகப்பிரிவு -
பதவி, ஆட்சி அதிகாரங்களுக்காக ராஜித எதையும் செய்ய துணிந்தவர்.. பதவி, ஆட்சி அதிகாரங்களுக்காக  ராஜித எதையும் செய்ய துணிந்தவர்.. Reviewed by Madawala News on 9/22/2017 07:39:00 PM Rating: 5