Kidny

Kidny

நாங்கள் மியன்மாரின் பிரஜைகள்.எங்களை மியன்மாரின் பிரஜைகள் எனப் பிரகடனப்படுத்தினால் நாங்கள் சந்தோசமடைவோம். இந்த உலகத்துக்கான




எனது பெயர் ஜெசீம்.எனக்கு பன்னிரண்டு வயது.பிரச்சனைகளுக்கு முன்னர் நான் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன்.எனக்குப் பிடித்த பாடம் ஆங்கிலம். ஏனென்றால் என்னால் ஆங்கிலம் பேச முடியுமாக இருந்தால் நிறைய பேருடன் தொடர்பு கொண்டு என்னுடைய கருத்துக்களைத் தெரிவிக்க முடியும்.என்னுடைய கல்வியை விரைவில் தொடர முடியுமென்று நான் நம்புகின்றேன். ஆசிரியராக வர வேண்டுமென்பது என்னுடைய விருப்பம்.

எங்களுடைய கிராமத்திற்கு இராணுவம் வந்த போது நாங்கள் ஓடியொழிய வேண்டியிருந்தது.நூறு அல்லது இருநூறு இராணுவ வீரர்களை நான் பார்த்தேன். அவர்கள் எங்களை சுட்டார்கள்.எங்கள் வீடுகளை எரித்தார்கள்.எனக்கு மிகவும் பயமாக இருந்தது.

நாங்கள் காட்டில் ஒழிந்து கொண்டோம். பங்களாதேசை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.எங்களுக்குப் பதின்மூன்று நாட்கள் எடுத்தது.சில நேரங்களில் காடுகளுக்குள் நாங்கள் மறைந்து கொள்ள வேண்டியேற்பட்டது.

அது ஒரு கடினமான பயணம். பெரிய குன்றுகளையும் சிற்றருவிகளையும் நாம் கடந்து சென்றோம். மறுமுனையில் இராணுவம் இருக்குமென்று எப்போதும் நான் பயந்து கொண்டிருந்தேன்.பங்களாதேசை அடைவதற்கு முன் நாங்கள் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் இராணுவம் நிலத்தில் குண்டுகளைப் புதைத்திருந்தது.அவற்றின் மீது நடந்தால் அவை வெடிக்கக் கூடும்.

என்னுடைய கிராமத்தைப் பற்றி நான் குழப்ப நிலையிலிருந்தேன்.ஏனென்றால் என்னுடைய கிராமம் இப்போது இல்லை. நாங்கள் எதனையும் கொண்டு வரவில்லை.எனவே அவற்றை இழந்து விட்டோம். நான் என்னுடைய அம்மாவுடன் வந்திருக்கிறேன். எனது தந்தை இப்போது ரக்கான் பிரதேசத்தில் உள்ளார்.அவர் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளச் சொன்னார். இன்னொரு தினத்தில் எங்களுடன் இணைவதாகக் கூறினார்.ஆனால் இப்போது எங்கே இருக்கின்றார் எனத் தெரியாது. அவரிடம் இருந்து எந்த செய்தியும் கிடைக்கவில்லை.இராணுவம் அவரைப் பிடித்து விட்டதோ அல்லது வெடிகுண்டின் மீது மிதித்து விட்டாரோ என்று நான் கவலைப்படுகின்றேன். நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்று சந்தோசப்படுகின்றேன்.இங்கே எந்தவொரு வீடும் இல்லாததால் ஈரமான தரையில் படுத்துறங்க வேண்டியிருப்பதனால் எமக்கு கடினமாக இருக்கின்றது.

நாங்கள் மியன்மாரின் பிரஜைகள்.எங்களை மியன்மாரின் பிரஜைகள் எனப் பிரகடனப்படுத்தினால் நாங்கள் சந்தோசமடைவோம். இந்த உலகத்துக்கான என்னுடைய செய்தி இதுவேயாகும்.

அல் ஜெஸீரா இணையத்தளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
மொழிபெயர்ப்பு - U.L. அஹமத் றஸ்மி

நாங்கள் மியன்மாரின் பிரஜைகள்.எங்களை மியன்மாரின் பிரஜைகள் எனப் பிரகடனப்படுத்தினால் நாங்கள் சந்தோசமடைவோம். இந்த உலகத்துக்கான  நாங்கள் மியன்மாரின் பிரஜைகள்.எங்களை மியன்மாரின் பிரஜைகள் எனப் பிரகடனப்படுத்தினால் நாங்கள் சந்தோசமடைவோம். இந்த உலகத்துக்கான Reviewed by Madawala News on 9/11/2017 08:52:00 PM Rating: 5