Ad Space avaiable

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக உதவியாளருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு ..


(மூதூர் நிருபர்)

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக உதவியாளருக்கு எதிராக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் நெருங்கிய உறவினரும், அமைச்சரின் பிரத்தியேக உதவியாளமான ஒருவரே  கிழக்கு மாகாண சபை வளாகத்திற்குள் வைத்து ஒருவரை தாக்க முற்பட்டதாக தெரிவித்து திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் 85வது அமர்வு நேற்று (25) நடைபெற்றது. இதன்போது அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நபரொருவர் தனது தனிப்பட்ட வேலைகள் காரணமாகவும், கிழக்கு மாகாண சபை அமர்வினை கண்டுகழிப்பதற்காகவும் கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்துள்ளார்.

இதன்போதே குறித்த நபர்  கிழக்கு மாகாண சபை வளாகத்திற்குள் வைத்து குறித்த நபரை நோக்கி இனிமேல் கிழக்கு மாகாண சபை பக்கம் வரக்கூடாது எனத்தெரிவித்ததுடன் அவரது பெற்றோர்களுக்கும் மோசமான வார்த்தைகளினால் தரக்குறைவாக பேசி தாக்குவதற்கும் முற்பட்டுள்ளார்.

குறித்த பிரச்சினை தொடர்பில் நேற்று இரவு வீடியோ ஆதாரத்துடன் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக உதவியாளருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு ..  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக உதவியாளருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு .. Reviewed by Madawala News on 9/27/2017 07:04:00 AM Rating: 5