Kidny

Kidny

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள் ஆளுநர் வசமாகிறது ?


கிழக்கு ,வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான காலம் இம்மாத இறுதியில் நிறைவடைய உள்ள நிலையில் தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொள்ளும் சட்டமூலம் ஒன்று நாளை மன்றில் வாக்கெடுப்பிற்கு சமர்பிக்கப்பட உள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகாண சபைகளுக்கான தேர்தல் முறையில் சிறு திருத்தம் மேற்கொள்ள ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட சட்டமூலம்  ஒன்றை மேலதிக சில திருத்தங்களுடன் நாளை மன்றில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

இது தொடர்பில் சற்று முன் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம், ரிசாத் இருவரும் அமைச்சர் லக்‌ஷமன் கிரியல்லவுடம் கடும் தர்க்கம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை மனோ கணேசன் மௌனவிரதம் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை குறித்த திருத்த சட்ட மூலம் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் குறித்த திருத்தங்கள் நிவர்த்தி செய்யப்படும் வரை மாகாண சபை தேர்தல் ஆளுனரின் கீழ் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.





கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள் ஆளுநர் வசமாகிறது ? கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகள் ஆளுநர் வசமாகிறது ? Reviewed by Madawala News on 9/19/2017 06:20:00 PM Rating: 5