Ad Space avaiable

வடகொரியாவை முற்றிலும் அழிப்பது தவிர வேறு வழிகிடையாது


வடகொரியா ஐ.நா. சபையின் கடினமான பொருளாதார தடைகள், உலக நாடுகளின் கண்டனம் என எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து நைட்ரஜன் வெடிகுண்டு, ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப் முதல் முறையாக இன்று ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார். முதல் உரையிலே எப்போதுபோல அவருடைய அதிரடி அறிவிப்புக்கள் வெளியாகி உள்ளது. வடகொரியாவிற்கு மீண்டும் எச்சரிக்கையை விடுத்து உள்ளார். 

வடகொரியா குறித்து பேசிய டொனால்டு டிரம்ப், “வடகொரியாவின் பொறுப்பற்ற அணு ஆயுதங்கள் மற்றும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஒட்டுமொத்த உலகத்திற்கே எச்சரிக்கையாக உள்ளது. வடகொரியாவின் ராக்கெட் மனிதனின் செயல்பாடு தன்னையும் மற்றும் தன்னுடைய பிராந்தியத்தையும் அழித்துக்கொள்ளுவது. அமெரிக்காவிற்கு ஆபத்து என்றால், எந்தஒரு வழியும் கிடையாது வடகொரியாவை முற்றிலும் அழிப்பதை தவிர்த்து,” என்றார். 

அமெரிக்கா தயாராக உள்ளது, வடகொரியாவை முற்றிலும் அழிக்கவும் முடியும், ஆனால் இது தேவையாக இருக்காது என நம்புகிறோம், இது ஐ.நா.சபையை பொறுத்தது.

 அணு ஆயுத திட்டங்களை கைவிடுவது மட்டும்தான் வருங்காலங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடியது, இது வடகொரியாவிற்கான நேரமாகும் என கூறிஉள்ளார் டொனால்டு டிரம்ப்.

வடகொரியாவை முற்றிலும் அழிப்பது தவிர வேறு வழிகிடையாது வடகொரியாவை முற்றிலும் அழிப்பது தவிர வேறு வழிகிடையாது Reviewed by Madawala News on 9/19/2017 09:24:00 PM Rating: 5